இந்தியா

 • All News
 • பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கணவன் தவறான தொடர்பு: 7 வயது மகளைக் கொன்று மனைவி வெறிச்செயல்
பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கணவன் தவறான தொடர்பு: 7 வயது மகளைக் கொன்று மனைவி வெறிச்செயல்
Apr 27
பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கணவன் தவறான தொடர்பு: 7 வயது மகளைக் கொன்று மனைவி வெறிச்செயல்
கணவருடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணின் மீது கொண்ட கோபம் காரணமாக அவரது 7 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

பெருந்துறை அடுத்த கருமாண்டிச்செல்லிபாளையத்தில் வசிப்பவர் சண்முகநாதன் (40). இவரது மனைவி கனகா (34). இவர்களது மகள் தனிஷ்கா (7) இவர் அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியே விளையாடச் சென்ற தனிஷ்காவைக் காணவில்லை என்று பெற்றோர் தேடியபோது வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தடியில் உடலில் காயங்களுடன மர்மமான முறையில் சிறுமி இறந்து கிடந்தார்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அங்கு வந்த போலீஸார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் மர்மச் சாவு குறித்து பெருந்துறை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். சிறுமி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது மர்மமாகவே இருந்தது.

இந்நிலையில் சிறுமி தனிஷ்காவின் பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் அக்கம்பக்கத்து வீடுகளில் தெருவில் உள்ளவர்களை சந்தேகப்படும்படி யாரும் புதிய நபர்கள் வந்தார்களா என விசாரித்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வயதான பெண் ஒருவர் கூறிய தகவல் போலீஸாருக்கு முக்கிய துப்பாக அமைந்தது.

சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வனிதா (33) என்ற பெண் கடைசியாக தனிஷ்காவை தோளில் தூக்கிச் சென்றதைப் பார்த்ததாக தெரிவித்தார். இதையடுத்து வனிதாவைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில சிறுமி தனிஷ்காவை தான் கொலை செய்ததை வனிதா ஒப்புக் கொண்டார்.

சிறுமியை ஏன் கொன்றாய் என்று போலீஸார் கேட்டதற்கு அவர் கூறிய காரணம் திடுக்கிட வைத்தது. குன்னூரைச் சேர்ந்த தான் 9 ஆண்டுகளுக்கு முன் கமலக்கண்ணன்(35) என்பவரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும் தற்போது தங்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் அவர் போலீஸில் அளித்த தகவல்:

திருமணம் ஆன அடுத்த ஆண்டே தற்போது வசிக்கும் கருமாண்டிச்செல்லிபாளையம் பகுதிக்கு கமலக்கண்ணனும் வனிதாவும் குடிவந்துள்ளனர். பக்கத்து வீட்டில் தனிஷ்காவின் பெற்றோர் சண்முகநாதன் கனகா தம்பதி வசித்து வந்துள்ளனர். பக்கத்து வீடு என்பதால் இரண்டு குடும்பமும் நட்போடு பழகி வந்துள்ளது.

கனகாவின் கணவர் சண்முகநாதன் மதுபோதைக்கு அடிமையானவர். அதனால் குடும்பத்தைச் சரிவர கவனிக்காமல் இருந்ததாகவும் இதற்கு உதவச்சென்ற வனிதாவின் கணவர் கமலக்கண்ணனுக்கும் கனகாவிற்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் முறையற்ற உறவாக மாறியுள்ளது.

இதுபற்றி தெரிந்த வனிதா தனது கணவரைக் கண்டித்துள்ளார். நாளடைவில் தைரியமடைந்த கமலக்கண்ணன் தனது முறையற்ற உறவை அதிகப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது மகனை கண்டுகொள்ளாமல் கனகாவின் மகள் தனிஷ்காவை அதிகமாக கொஞ்சுவதும் அதற்காக செலவு செய்வதுமாக தனிஷ்காவை தனது சொந்த மகள் போல் கமலக்கண்ணன் கவனித்து வந்துள்ளார்.

இதனால் கமலக்கண்ணனுக்கும் வனிதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவன் கமலக்கண்ணன் தனது பேச்சைக் கேட்பதில்லை என்றவுடன் வனிதாவின் கோபம் சிறுமி தனிஷ்கா பக்கம் திரும்பி உள்ளது. தனிஷ்கா உயிருடன் இருந்தால் தனக்கும், தன் மகனுக்கும் பிரச்சினை ஏற்படும் என நினைத்த வனிதா சிறுமியைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தனிஷ்காவை தின்பண்டங்கள் தருவதாகக் கூறி வீட்டிற்குச் கூட்டிச் சென்று வயைப் பொத்தி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் யாரும் கவனிக்காத நேரமாகப் பார்த்து சிறுமியின் உடலைத் தோளில் தூக்கிச் சென்று மரத்தடியில் போட்டுள்ளார்.

யாரும் கவனிக்கவில்லை என வனிதா நினைத்திருந்தாலும் மூதாட்டி அதைக் கவனித்துள்ளார். அதுவே வனிதா சிக்க காரணமாக அமைந்தது. பின்னர் போலீஸார் வனிதாவைக் கைது செய்தனர்.

கணவனின் தவறான உறவு காரணமாக அப்பாவி குழந்தை கொல்லப்பட்டார். ஒரு குடும்பமே சிதைந்து போனது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun12

 தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்த பீலா ராஜ

Jan11

உத்தரப்பிரதேசத்தின் பருக்காபாத்தில் இருந்து ராஜஸ்தான

Jun15

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடைபெற்ற கூட்டத்தில் காணொ

May30

முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர்க

Mar29

நிறைமாத கர்ப்பிணி வயிற்றுடன் இந்தியாவிற்கான முதல் கொர

Feb06

நடிகர் விஜய் வீட்டில் ஏறக்குறைய 24 மணி நேரங்களுக்கு மேலா

Feb13

லக்னோ நீதிமன்றத்தில் இன்று திடீரென குண்டு வெடித்தது.

May22

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரி

Jun08

தமிழகத்தில் மேலும் 1562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய

Jul03

210 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட

May19

சென்னையில் அம்மா உணவகங்களிலில்  மூன்று வேலையு

May18

 ராமேஸ்வரம், தங்கச்சிமிடம், பாம்பன், மண்டபம் துறைமுக

Mar29

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரோபோக்களை இலவசமாக தருகிற

Jun12

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார். இ

Feb05

தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் பன்னீர

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (22:25 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (22:25 pm )
Testing centres