இந்தியா

 • All News
 • மாணவர்களை மீட்க தயாரான இந்தியா மெளனமான இம்ரான்
மாணவர்களை மீட்க தயாரான இந்தியா மெளனமான  இம்ரான்
Feb 09
மாணவர்களை மீட்க தயாரான இந்தியா மெளனமான இம்ரான்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான சீனாவின் வூஹான் நகரில் சிக்கிய பாகிஸ்தான் மாணவர்களை மனிதநேயத்தின் அடிப்படையில் மீட்க தயாராக உள்ளதாக பிரதமர் மோடி சார்பில் வெளியுறவு அமைச்சகம் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால்இ அவர் எந்த பதிலும் கூறாததால் மாணவர்களை மீட்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் உண்டான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம்பேர் வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வூஹான் நகரில் படித்து வந்த இந்திய மாணவர்களை அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு களமிறங்கியது.
இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் சீனாவிற்கு சென்று அங்கிருந்த 650க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்டு வந்தது. அவர்கள் அனைவரும் தற்போது டில்லியின் மானேசரில் உள்ள மையத்தில் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளனர். அப்போது மாலைதீவை சேர்ந்த 7 பேரையும் மத்திய அரசு சீனாவில் இருந்து அழைத்து வந்தது. மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலி, தனது நாட்டு மாணவர்களை மீட்டு வரும்படி பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்டதன் பேரில் அவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதற்காக மோடிக்கு மாலைதீவு அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அங்குள்ள பாகிஸ்தான் மாணவர்களையும் அழைத்து வர இந்திய அரசு தயாராக இருந்தது தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில் வூஹான் நகரில் ஏராளமான பாகிஸ்தான் மாணவர்களும் தங்கியிருந்தனர். மனிதநேய அடிப்படையில் அவர்களை மீட்டு வருகிறோம் என பிரதமர் மோடியின் அறிவுரைப்படி நமது வெளியுறவு அமைச்சகம் சார்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால்,இம்ரான் கானிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அந்நாட்டில் உள்ள பொருளாதார சிக்கல்களும் பல்வேறு குழப்பங்களும் நிலவுவதால் அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் பாகிஸ்தான் மாணவர்களை அழைத்து வர முடியவில்லை. வ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு நாட்டினர் சீனாவில் இருந்து வெளியேறிவரும் நிலையில்இ தங்களது நாட்டு மாணவர்களை மீட்க போவதில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது. இதற்கு பாகிஸ்தான் மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தியாவிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.
காஷ்மீர் விவகாரத்தில்இ இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை இம்ரான்கான் தீவிரப்படுத்தியுள்ளார். சர்வதேச அமைப்புகளில்இ இந்தியா குறித்து தவறான குற்றச்சாட்டுகளையும்இ பொய் தகவல்களையும் பரப்பி வருகிறார். ஐ.நா.இவில் காஷ்மீர் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற இம்ரானின் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளை அவரால் திருப்ப முடியவில்லை. இந்த விவகாரத்தில்இமுஸ்லிம் நாடுகளும் ஆதரவு அளிக்க மறுத்துவிட்டது. இம்ரான் கானின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதால்இ அவர் மீது அந்நாட்டு ராணுவம் அதிருப்தியில் உள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun05

முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈ

Jan26

இந்தியா- பிறேஸில் ஆகிய நாடுகளுக்குடையே எண்ணெய், எரிவாய

Jan31

இந்தியா எங்கள் மீது போர்தொடுத்தால், அந்தப் போரை நாங்கள

Jun02

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி திரிவேந்திரசி

Jan03

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து எதிா்கட்சியின

Jan23

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓபிஎஸ் சகோதரர்

Feb20

கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில், 'க

Jun03

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாநில வேளாண்மைத்துறை இயக

May29

 அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழ

Jun06

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு

Feb05

தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் பன்னீர

Jun02

தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவிற்கு ப

Jan23

ராஜஸ்தான் மாநிலத்தின் நிமோடியா கிராமத்தைச் சேர்ந்தவர

Feb10

பவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குள் இருக

Jan24

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவ

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (09:13 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (09:13 am )
Testing centres