ஈழம் சினிமா

  • All News
  • ஈழத் திரைக்கலைஞர்களிற்கான மாபெரும் குறும்படப் போட்டி .
ஈழத் திரைக்கலைஞர்களிற்கான மாபெரும் குறும்படப் போட்டி  .
Feb 09
ஈழத் திரைக்கலைஞர்களிற்கான மாபெரும் குறும்படப் போட்டி .
சூரிச் சிவன் கோயில் சைவத்தமிழ் சங்கம் சிவன் தொலைக்காட்சியின் பேராதரவில் எங்கள் கலைஞர்களிற்காய் குறும்படப்போட்டியொன்றை நடத்துகின்ற அறிவுப்பொன்றை வெளியீட்டிருக்கின்றது .

இருபந்தைந்து ஆண்டுகளை கடந்து சமய சமூக பணியாற்றிவரும் சைவத்தமிழ்சங்கம் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாய் நடத்திவரும் அற்றார் அழிபசி தீர்த்தல் என்னும் தொனிப்பொருளில் நடாத்துகின்ற கனதியான நிகழ்வில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதியநிகழ்வுகளை சமூக அக்கறை கருதி நிகழ்த்திவருகின்றது .

அந்தவரிசையில் இம்முறை ஈழத்து திரைக்கலைக்கு கைகொடுக்கும் முகமாக ,
எங்கள் ஈழக்கலைஞர்களை ஊக்குவிக்கின்ற செயற்பாடாய் மாபெரும் குறும்படப்போட்டியொன்றை ஏற்பாடு செய்திருக்கின்றது சவைத்தமிழ் சங்கம் .

மாபெரும் பரிசுத்தொகையினை உள்ளடக்கிய இந்த போட்டியில் பங்குபற்றி பயன்பெறுமாறு அறிவிப்பொன்றையும் வெளியீடு செய்திருக்கின்றது .

சமூக ஊடகங்களில் யாழ்சிறி :

  • யாழ்சிறி பேஸ்புக்
  • யாழ்சிறி ட்விட்டர்
  • யாழ்சிறி யு டியூப்
  • Share News