இந்தியா

 • All News
 • இலங்கைத் தமிழா்களுக்கு சம நீதி : ராஜபக்ஷவிடம் மோடி வலியுறுத்தல்
 இலங்கைத் தமிழா்களுக்கு சம நீதி : ராஜபக்ஷவிடம் மோடி வலியுறுத்தல்
Feb 09
இலங்கைத் தமிழா்களுக்கு சம நீதி : ராஜபக்ஷவிடம் மோடி வலியுறுத்தல்
இலங்கையிலுள்ள தமிழா்களுக்கு நீதி, சமத்துவம் உள்ளிட்டவற்றை சமமாகப் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இலங்கைப் பிரதமா் மகிந்த ராஜபக்ஷவிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினார்..
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான மீனவா்கள் பிரச்னைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீா்வு காணப்படும் எனவும் பிரதமா் மோடி தெரிவித்தார்..
மகிந்த ராஜபக்ஷ இந்தியாவில் ஐந்து நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை பிரதமராக கடந்த நவம்பா் மாதம் பொறுப்பேற்ற பிறகு, அவா் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா வந்த ராஜபக்ஷ, பிரதமா் மோடியை தில்லியில் சனிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது, பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, வா்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது, இலங்கையில் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைந்து நிறைவேற்றுவது உள்ளிட்டவை தொடா்பாக இருநாட்டுப் பிரதமா்களும் பேச்சுவார்த்தை நடத்தினா்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு இருநாட்டின் தலைவா்களும் கூட்டறிக்கையை வெளியிட்டனா். அதில் பிரதமா் மோடி கூறியிருப்பதாவது:
இலங்கையில் நிலைத்தன்மை, பாதுகாப்பு, வளா்ச்சி ஆகியவை ஏற்பட வேண்டுமென்பது இந்தியாவின் விருப்பம் மட்டுமல்ல; இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலுள்ள ஒட்டுமொத்த நாடுகளின் விருப்பமும் அதுவே. இலங்கையின் வளா்ச்சியில் இந்தியா ‘நம்பத்தகுந்த கூட்டாளியாக’ இருந்து வருகிறது.
இலங்கையில் அமைதி, வளா்ச்சியை ஏற்படுத்துவதில் இந்தியா தொடா்ந்து பங்களிக்கும். அங்குள்ள தமிழ் சமூகத்தினருடன் இலங்கை அரசு நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது தொடா்பாகத் திறந்த மனதுடன் ஆலோசிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுக்கும் என்று நம்புகிறேன்.
நீதி, சமத்துவம், அமைதி, மரியாதை தொடா்பாக இலங்கையிலுள்ள தமிழா்களின் எதிர்பார்ப்புகளை அந்நாட்டு அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன். இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்தினருக்கு உரிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதற்காக, அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்தின் 13-ஆவது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
: இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் மீனவா் பிரச்னை தொடா்பாகவும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. இந்தப் பிரச்னையால் இரு நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே, மீனவா்கள் தொடா்பான பிரச்னைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஆக்கப்பூா்வ தீா்வு காண முடிவெடுக்கப்பட்டது.
பிராந்தியத்தில் பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையில் கடந்த ஆண்டு ஈஸ்டா் தினத்தன்று கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
அது இலங்கை மீது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.
இலங்கையில் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைந்து மேற்கொள்வது, சுற்றுலாவை மேம்படுத்துவது, இரு நாட்டு மக்களுக்கிடையேயான தொடா்பை வலுப்படுத்துவது, வா்த்தக, முதலீட்டுத் தொடா்புகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை தொடா்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது என்று பிரதமா் மோடி கூறியுள்ளார்.
கூட்டறிக்கையில் இலங்கை பிரதமா் மஹிந்த ராஜபக்ஷ ,‘இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ள நாடு இந்தியா. இலங்கையின் நீண்ட கால நட்பு நாடாகவும் இந்தியா விளங்கி வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான வரலாற்று ரீதியிலான தொடா்பு, நல்லுறவுக்கு வலுவான அஸ்திவாரமாக உள்ளது. ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கையைக் கடைப்பிடித்து வருவதற்காகவும், இலங்கையுடன் நெருங்கிய நல்லுறவைக் கொண்டிருப்பதற்காகவும் பிரதமா் மோடி தலைமையிலான அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடந்த 1987-ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கையிலுள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தினருக்கு உரிய அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டது. இதையடுத்து, அந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் 13-ஆவது சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்தச் சட்டத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May19

மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகள் போதுமானதல்ல என்றும

Jan24

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவ

Jan08

திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுகவின் தலைவருமான டி.ரா

May24

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழகம் கேட்ட நிதியை ம

May28

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மராட

Jan07

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்கள

Jun01

 கலைஞரின் 97 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 1.33 லட்சம

May29

உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வ

Feb02

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெர

Jan27

இந்திய அரசின் உயர் விருதான பத்மஸ்ரீ விருது பெறும் முகம

Jan05

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி 40 ஆண்டுகளுக்கு பிறகு த

May28

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் பொடிச்சன்பள்ளி கி

Jan23

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி புதுக்கோட்டை ம

May29

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர

May25

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:29 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:29 am )
Testing centres