இந்தியா

 • All News
 • அபராதம் செலுத்தாதல் சசிகலாவின் சிறைத்தண்டனை அதிகரிக்கும்
 அபராதம் செலுத்தாதல் சசிகலாவின் சிறைத்தண்டனை அதிகரிக்கும்
Feb 05
அபராதம் செலுத்தாதல் சசிகலாவின் சிறைத்தண்டனை அதிகரிக்கும்
10 கோடி ரூபா அபராத தொகையை செலுத்தாவிட்டால், சசிகலா கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனை காலம் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனால் 3 பேரும் இன்னும் அபராத தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் அவர்கள் இன்னும் அபராத தொகையை செலுத்தவில்லை. தண்டனை காலம் முடியும் முன்பு அபராத தொகையை செலுத்தாவிட்டால் 3 பேரும் கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட பெரிய வழக்குகளில் அபராதம் விதிக்கப்படுபவர்கள் தண்டனையின் கடைசி வருடத்தில்தான் அபராத தொகையை செலுத்துவார்கள். சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவதில் சிக்கல்கள் உள்ளன. அபராத தொகை அவர் சம்பாதித்த பணத்தில் இருந்து தான் செலுத்த வேண்டும். அவர் சிறையில் வேலைபார்த்து சம்பளம் வாங்கி இருந்தால் அந்த பணத்தை கழித்து மீதி பணத்தை செலுத்தினால் போதும்.

அவர் செலுத்தும் அபராத தொகைக்கு வருமான வரித்துறையில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அபராத தொகையை சசிகலா காசோலை அல்லது வரைவோலை மூலமாக செலுத்த வேண்டும். சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கையில் ஈடுபட்டதாக அவர் மீது ஊழல் தடுப்பு பிரிவில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கில் விசாரணை முடிந்து குற்றவாளி என தீர்ப்பு வந்தால், அவருக்கு அந்த வழக்கில் கூடுதல் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி உள்ளதால் சசிகலா நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து முன்கூட்டியே வெளிவர வாய்ப்பு இல்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb05

கட்டார் தலைநகா் டோகாவிலிருந்து தாய்லாந்தின் பாங்காக்

Feb06

நடிகர் விஜய் வீட்டில் ஏறக்குறைய 24 மணி நேரங்களுக்கு மேலா

May19

தண்டையார்பேட்டை: சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பை

May26

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும்

Jan06

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், சட்ட

Jan30

இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்ட

May18

 ராமேஸ்வரம், தங்கச்சிமிடம், பாம்பன், மண்டபம் துறைமுக

May24

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழகம் கேட்ட நிதியை ம

Jun12

ஊரடங்கால் வேலைவாய்ப்புகளை இழந்து அனைத்து தரப்பினரும

Jan24

இந்திய குடியரசு தினம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) க

Jan13

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சென்ன

Jun03

தமிழகத்தில் சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பாநிலையங்கள

Jun10

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந

Jun12

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்

Jun03

தென்தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான குற்றாலத

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:44 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:44 pm )
Testing centres