இந்தியா

 • All News
 • அதிமுக எம்.எல்.ஏ. க்கள் தகுதி நீக்க வழக்கில் தாமதம் செய்வது ஏன்?
அதிமுக எம்.எல்.ஏ. க்கள் தகுதி நீக்க வழக்கில் தாமதம் செய்வது ஏன்?
Feb 05
அதிமுக எம்.எல்.ஏ. க்கள் தகுதி நீக்க வழக்கில் தாமதம் செய்வது ஏன்?
தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க. - எம்.ல்.ஏ தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சபாநாயகர் மூன்று ஆண்டுகளாக முடிவு எடுக்காமல் கால தாமதம் செய்தது ஏன்' என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.முக இரண்டாக பிரிந்தது. பன்னீர்செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏ. க்கள் தனி அணியாக செயல்பட்டனர். இதையடுத்து 2017 பெப்ரவரியில் முதல்வர் இ.பி. தலைமையிலான அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ. க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது.
இவர்கள் மீது சபாநாயகர் தனபால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே 11 பேரும் மீண்டும் இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. வில் இணைந்தனர். இதையடுத்து 11 எம்.எல்.ஏ. க்களை தகுதி நீக்கக் செய்யக்கோரி தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 'சபாநாயகர் விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது' என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தி.மு.க.இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகிய தி.மு.க. தரப்பு இந்த வழக்கை விரைவாக விசாரிக்கும்படி முறையிட்டது.இதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், பி.ஆர்.கவாய்,சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது
இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ. க்கள் விஷயத்தில் முடிவு எடுக்க சபாநாயகர் மூன்று ஆண்டுகளாக கால தாமதம் செய்தது ஏன்... இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டு உள்ளது...

இந்த விஷயத்தில் சபாநாயகர் முடிவு எடுப்பாரா மாட்டாரா... மூன்று ஆண்டு தாமதம் என்பது தேவையில்லாத ஒன்று. இதில் தமிழக அரசு முடிவு என்ன என்பது குறித்து மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 14க்கு ஒத்தி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun06

சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் உலகையே

May22

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரி

Feb05

10 கோடி ரூபா அபராத தொகையை செலுத்தாவிட்டால், சசிகலா கூடுத

Jan11

இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனரும், எம்.பியுமான பாரி

May22

40 நிமிடங்களுக்குள் இயங்கும் விமானங்களுக்கு குறைந்த ம

May20

வெப்பம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை

May28

கொரோனா வைரஸ் பாதிப்பின் ஊரடங்கு காலக்கெடு வருகிற 31-ந்த

Jan03

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து எதிா்கட்சியின

Jan10

மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வை

Jun01

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால

Feb08

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை முன்னாள் பிரதமர் மன்ம

Jun04

இந்தியாவில் முன்னர்  இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகப

May25

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட

Jan27

திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ந

May18

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறைய

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:17 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:17 am )
Testing centres