இந்தியா

  • All News
  • ஹொங்கொங் விமான சேவை யை பெப்.8 முதல் நிறுத்துகிறது ஏா் இந்தியா
ஹொங்கொங் விமான சேவை யை பெப்.8 முதல் நிறுத்துகிறது ஏா் இந்தியா
Feb 05
ஹொங்கொங் விமான சேவை யை பெப்.8 முதல் நிறுத்துகிறது ஏா் இந்தியா
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தனது தில்லி- ஹொங்கொங் விமான சேவையை பிப்ரவரி 8-ஆம் திகதி முதல் நிறுத்திவைப்பதாக ஏா் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ், பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆட்பட்டு, ஹொங்கொங் கில் சிகிச்சை பெற்று வந்த நபா் ஒருவா் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை தகவல் வெளியானது.
இதன் காரணமாக ஏா் இந்தியாவின் தில்லி- ஹொங்கொங் விமான சேவையை நிறுத்தப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 7 ஆம் திகதி அந்த நாட்டிற்கு செல்லும் ஏஐ314 விமானத்துக்கு பிறகு விமான சேவை நிறுத்திவைக்கப்படும் என ஏா் இந்தியா நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஷ்வனி லோஹானி, தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தனது தில்லி-ஷாங்காய் விமான சேவையை ஏா் இந்தியா நிறுவனம் ஏற்கெனவே நிறுத்திவைத்தது. தற்போது தில்லி- ஹொங்கொங் விமான சேவையையும் நிறுத்திவைப்பதாக அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இண்டிகோ சேவை நிறுத்தம்: கரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக கொல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்ஸூ நகருக்கான தனது விமான சேவையை இண்டிகோ நிறுவனம் நிறுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் பிப்ரவரி 25-ஆம் தேதி வரை கொல்கத்தா-குவாங்ஸூ இடையே இண்டிகோ விமான சேவை நிறுத்தப்பட உள்ளது. இதேபோல் பிப்ரவரி 7-ஆம் திகதி முதல் பெப்ரவரி 26-ஆம் திகதி வரை குவாங்ஸூவில் இருந்து கொல்கத்தா இடையிலான விமான சேவையும் நிறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா-சீனா இடையிலான தனது 3 விமானங்களின் சேவையை ஏற்கெனவே இண்டிகோ நிறுவனம் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan04

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் இன்றைய பாகிஸ

Feb01

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதிக்கப

Feb08

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை முன்னாள் பிரதமர் மன்ம

Jan31

யுனெஸ்கோ அமைப்பின் தலைவா் ஆட்ரே ஆசுலே இரு நாள் பயணமாக வ

Jan14

ரயிலில் கெட்டுபோன உணவு வழங்கிய ரயில்வே ஒப்பந்ததாரருக்

Jan10

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த

Feb06

நடிகர் விஜய் வீட்டில் ஏறக்குறைய 24 மணி நேரங்களுக்கு மேலா

Jan10

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்த

Jan31

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து த

May15

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 6 நாட்கள் பணிய

May17

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கில் , சென்னை, தி

Jan07

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.01

Jan03

சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரொக்கம் 1,000 ரூபாய் ரேஷன

May18

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறைய

Jan06

சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவ

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (03:12 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (03:12 am )
Testing centres