இந்தியா

 • All News
 • டில்லி தேர்தலில் வாக்களிக்க இலவச விமான டிக்கெட்
 டில்லி தேர்தலில் வாக்களிக்க இலவச விமான டிக்கெட்
Feb 04
டில்லி தேர்தலில் வாக்களிக்க இலவச விமான டிக்கெட்
டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வாக்களிப்பதற்கு வசதியாக இலவச விமான டிக்கெட்டை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
டெல்லி சட்டசபைக்கு வருகிற 8 ஆம் திகதி சனிக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில் வாக்காளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வாக்குப் போடுவதற்கு வசதியாக இலவச விமான டிக்கெட்டை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஜய்சிங் கூறியதாவது:-

வாக்களிப்பது ஜனநாயகத்தின் முக்கிய கடமை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது மக்களில் பலர் சொந்த இடத்தில் இருந்து விலகி வெளியூர்களில் வேலை பார்க்கின்றனர். இதனால் அவர்களால் வாக்குப் போடும் உரிமையை பயன்படுத்த முடியவில்லை. எனவே டெல்லி வாக்காளர்கள் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க உதவவும், எல்லைகள் கடந்து எங்கிருந்தும் வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லவும் எங்கள் நிறுவனம் இலவச டிக்கெட் வழங்குகிறது.
இதற்காக தகுதி வாய்ந்த வாக்காளர்கள் எங்கள் நிறுவனத்தின் வலைத்தளத்தில் பதிவு பக்கத்தில் முன்னதாகவே பதிவு செய்திருக்கவேண்டும். இதன் அடிப்படையில் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயண டிக்கெட் வழங்கப்படும்.

பிப்ரவரி 8 ஆம் திகதி தேர்தல் அன்று வாக்காளர்கள் வந்து அதே நாளில் திரும்ப தயாராக இருந்தால் அவர்களுக்கு திரும்புவதற்கான டிக்கெட்டும் சேர்த்து இலவசமாக வழங்கப்படும். மாறாக பிப்ரவரி 7 ஆம் திகதியே வருவதாக இருந்தாலோ அல்லது வாக்குப் போட்டுவிட்டு மறுநாள் 0 ஆம் திகதி திரும்புவதாக இருந்தாலோ அவர்களுக்கு ஒரு நேரத்துக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan05

சூடான் நாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த மூன

Feb01

இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி

Jan10

சேலத்தில் சிவப்பு பாதரசம் என்ற பெயரில் பல கோடி ரூபாய்

May25

சிங்கம்பட்டி ஜமீன் இறப்பிற்கு நடிகர் சிவகார்த்திகேயன

Jan03

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ.316 கோடிக்கு மதுவ

Jan14

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம

Jan30

தென்னிந்திய சினி டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்

Jan08

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 6-ம் தேதி காலை தொடங்கியத

May22

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரி

Apr30

பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்

May17

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கில் , சென்னை, தி

Apr29

ஸ்ரீரங்கம் கீழவாசல் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந

Jan07

சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டார்ஸ் கடையில் எஸ்கலேட்ட

Feb08

பீகாரை சேர்ந்த ஆராய்ச்சி மாணவருக்கு நாஸா அழைப்பு விடுத

Jan25

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:30 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:30 am )
Testing centres