இந்தியா

 • All News
 • 4 அடி உயர வாலிபரை காதலித்து கரம் பிடித்த இளம்பெண்
 4 அடி உயர வாலிபரை காதலித்து கரம் பிடித்த இளம்பெண்
Feb 07
4 அடி உயர வாலிபரை காதலித்து கரம் பிடித்த இளம்பெண்
சினிமா நடிகர்கள் போன்று மணமகன் வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு மத்தியில் சுமார் 4 அடி உயரம் மட்டுமே உள்ள இளைஞனை இளம்பெண் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
காதல்... என்ற மூன்றெழுத்து மந்திர சொல்லுக்கு மயங்காத மனிதன் இல்லை என்றும் கூறுமளவிற்கு பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. நிறம், தோற்றம், படிப்பு உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி மனம் ஒன்றுபட்டால் போதும், என்பதை மெய்ப்பிக்கும் வகையிலான காதல் கரூரில் அரங்கேறி, திருமணத்தில் முடிந்துள்ள
கரூர் மாவட்டம் பஞ்சமாதேவியை அடுத்த சோமூரைச் சார்ந்த இளைஞர் விக்னேஷ்வரன் (வயது 25). சுமார் 4 அடி உயரம் மட்டுமே கொண்ட இவர் தன்னம்பிக்கையுடன் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

பொழுது போக்கிற்காகவும், தனது தொழிலை விரிவுபடுத்தவும், முகநூலில் கணக்கு துவங்கிய விக்னேஷ்வரனுக்கு சிவகங்கையை சார்ந்த பவித்ரா (வயது 24) என்ற இளம்பெண் நண்பராக அறிமுகமானார். டி.பார்ம் படித்துக் கொண்டிருந்த அவரும், விக்னேஷ்வரனும் முகநூலில் நட்பை வளர்த்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அவர்களது பழக்கம் காதலாக மாறியது.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனை அறிந்த பெண் வீட்டார் உனக்கும், விக்னேஷ்வரனுக்கு எள்ளளவும் பொருத்தம் இல்லை. எனவே உங்கள் காதலை ஏற்க முடியாது, அவரை மறந்து விடு என்று வற்புறுத்தினர்.

ஆனாலும் மனதால் இணைந்த காதல் ஜோடி எந்த காரணத்தை கொண்டு நம்மை பிரிக்க நினைத்தாலும் அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதன் தொடர்ச்சியாக பவித்ரா அதிரடி முடிவெடுத்து பெற்றோர், உற்றார் உறவினரை உதறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

நேற்று கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நண்பர்கள், விக்னேஷ்வரனின் உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பெண்ணின் வீட்டார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து இருவரது பெற்றோரையும் வரவழைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரியா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் வீட்டார் இந்த திருமணத்தை ஏற்க மறுத்து என் மகளே எங்களுக்கு வேண்டாம் எனக் கூறி விட்டு சென்றனர்.
ஆனால் விக்னேஷ்வரன் குடும்பத்தினர் மணமகளை ஏற்றுக்கொண்டதால் அவர்கள் இருவரும் புதுவாழ்வை தொடங்க உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்றனர். சினிமா நடிகர்கள் போன்று தனக்கு மணமகன் வேண்டும் என கனவு கண்டு கொண்டிருக்கும் பெண்களுக்கு மத்தியில் சுமார் 4 அடி உயரம் மட்டுமே உள்ள இளைஞனை இளம்பெண் திருமணம் செய்து கொண்டதை அப்பகுதியில் இருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து, மனதார ஆசீர்வதித்து சென்றனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May28

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்

Jun06

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்தி

Jun01

 பெரம்பலூர் அருகே டிரான்ஸ்பார்மர் பழுதாகி ஒரு மாதமா

May21

புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற

May14

கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தமிழக அரசு

May14

மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டி

Jun15

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில்

Jun11

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதியில் இருந்து தர

Jan24

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தில் அவரது சிலைய

Jan07

சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டார்ஸ் கடையில் எஸ்கலேட்ட

Apr29

ஊரடங்கு உத்தரவால் தொழிற் சாலைகள் உணவகங்கள் மூடப்பட்டத

Jan14

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம

May21

கேரளாவில் சலூன் கடைகளில் வெட்டிய முடியை வாடிக்கையாளர

Jan10

சென்னையில் இதற்கு முன் ஏ.சி வசதி கொண்ட பேருந்துகள் பல வழ

Jan31

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து த

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (23:00 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (23:00 pm )
Testing centres