இந்தியா

 • All News
 • விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை நிறைவு
விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை நிறைவு
Feb 06
விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை நிறைவு
நடிகர் விஜய் வீட்டில் ஏறக்குறைய 24 மணி நேரங்களுக்கு மேலாக நடந்து வந்த வருமானவரி சோதனை புதன் இரவு 8 மணியளவில் நிறைவு பெற்றது.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் கடைசியாக தயாரித்த பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜய்க்கு பல கோடி ஊதியமாக வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே அந்த நிறுவனம் மற்றும் அந்த திரைப்படத்திற்கு பண உதவி செய்த பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் அவரது நண்பர் வீடு, தொடர்புடைய இடங்கள் என மொத்தம் 38 இடங்களில் செவ்வாய்கிழமை i வருமான வரி சோதனை நடைபெற்று வந்தது.
இடத்ன் தொடர்ச்சியாக செவ்வாயன்று கடலூர் மாவட்டம் நெய்வேலி எல்.எல்.சி. சுரங்கம் பகுதியில் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த விஜயிடம் வருமானவரித்துறையினர் விசாரணை செய்தனர்.பின்னர், அங்கிருந்து விஜயை காரில் அழைத்து வந்து சென்னை அருகே பனையூரில் உள்ள அவரது பங்களாவில் விசாரணை செய்தனர். அதேவேளையில் அவரது வீட்டில் சோதனையும் நடைபெற்றது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வருமானவரித்துறையினர் விஜயிடமும்,அவரது மனைவி சங்கீதாவிடமும் தொடர்ந்து விசாரணை செய்தனர்.
புதனன்று இரண்டாவது நாளாகவும் விஜய் பங்களா உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் இச் சோதனை நீடித்தது. சோதனையையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. முக்கியமாக பனையூரில் உள்ள விஜய் பங்களாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அவர் வீட்டுக்கு செல்லும் சாலையிலும் பாதுகாப்புக்காக பொலிஸார் நிறுத்தப்பட்டனர். விஜயிடமும், அவரது குடும்பத்தினரிடமும் திரைப்படத்துக்கு வாங்கும் ஊதியம்,அவரது முதலீடுகள்,சொத்துக்கள் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்டு, பதிலை அதை வாக்குமூலமாக வருமானவரித்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர். சோதனையிலும், விசாரணை இரண்டாவது நாளாகவும் நீடித்ததால், வருமானவரித்துறை ஷிப்ட் அடிப்படையில் அங்கு பணியில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு தேவையான உணவை ஸ்விக்கி மூலம் வரவழைத்தனர். மேலும் விஜய் குடும்பத்தினரிடம் சுமார் 20 மணிக்கு மேலாக வருமானவரித்துறை விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஏறக்குறைய 24 மணி நேரங்களுக்கு மேலாக நடிகர் விஜய் வீட்டில் நடந்து வந்த வருமானவரி சோதனை புதன் இரவு 8 மணியளவில் நிறைவு பெற்றது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan03

சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரொக்கம் 1,000 ரூபாய் ரேஷன

May02

கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஈஷா யோக

May28

தெலங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது

Jan23

ஜார்க்கண்ட் மாநில அரசு விடுமுறை தின பட்டியலில் இருந்து

Feb01

இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்

Jan06

சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் அமைந்துள்ள சென்னை த

Jan25

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த அதிமுக எம்.ப

Jan06

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அரசு

Feb02

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்

Feb20

கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில், 'க

May20

திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோ

Jan10

மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர், த

Jan05

எங்களுக்குக் கிடைத்துள்ள அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்ட

Jan29

''இந்தியா அமைதியும், நல்லிணக்கமும் கொண்ட நாடு என்ற நற்பெ

Jan27

திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ந

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (01:59 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (01:59 am )
Testing centres