இந்தியா

  • All News
  • மோடியை விமர்சித்து நாடகம் 85 மாணவரிடம் விசாரனை
 மோடியை விமர்சித்து நாடகம்  85 மாணவரிடம் விசாரனை
Feb 06
மோடியை விமர்சித்து நாடகம் 85 மாணவரிடம் விசாரனை
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் சாஹீன் பள்ளி உள்ளது இங்கு கடந்த 21 ஆம்திகதி நடத்தப்பட்ட நாடக காட்சி பேஸ்புக்கில் வீடியோவாக பரவியது. அதில் குடியுரிமை திருத்த சட்டத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் மாணவ, மாணவிகள் நடித்திருந்தனர்.

பிரதமர் மோடியை விமர்சித்து மாணவிகள் பேசுவது போல காட்சிகள் இருந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் பொலிஸில் புகார் செய்தார்.

அதன்பேரில் விசாரணை நடத்தியது. பொலிஸார் பள்ளி நிர்வாகம் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் உருது ஆசிரியை பரீதா பேகம் மற்றும் நாடக உரையாடலை எழுதிய ஒரு குழந்தையின் தாயார் நபுன்னிகா ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

பள்ளி ஊழியர்கள், நாடகத்தில் நடித்த குழந்தைகளிடமும் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் சீருடையில் சென்று குழந்தைகளிடம் விசாரணை நடத்தியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் பொலிஸார் சாதாரண உடையில் சென்று பள்ளி நிர்வாகிகள் மற்றும் குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கடந்த 9 நாட்களில் மட்டும் 5 முறை போலீசார் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தி உள்ளனர்.

ஒவ்வொரு முறையும் நாடக உரையாடலில் குறிப்பிட்ட பகுதியை எழுதிக் கொடுத்தது யார்? என திரும்பத்திரும்ப குழந்தைகளிடம் கேட்கிறார்கள். நாடகத்தில் நடிக்காத குழந்தைகளிடமும் விசாரணை நடத்துகிறார்கள். பொலிஸார் பள்ளியிலேயே முகாமிட்டு இதுவரை 85 குழந்தைகளிடம் விசாரணை நடத்தி தொந்தரவு செய்கிறார்கள்’’ என்றனர்.

பொலிஸாரின் ன் இந்த நடவடிக்கைக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய முன்னாள் தலைவர் மாரிசுவாமி கூறுகையில், ‘முதலில் இந்த வழக்கை சிறப்பு பிரிவுக்கு மாற்ற வேண்டும். இதில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளது’ என்றார்.

இந்த வழக்கில் கைதான நபுன்னிகா விதவை ஆவார். அவரது குழந்தை தனித்து விடப்பட்டதால் அந்த குழந்தையை ஆசிரியை ஒருவர் பாதுகாத்து வருகிறார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெர

May14

 தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று ,

May26

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும்

May17

இந்தியாவில் கொரோனா பாதிப்பு- 90,648; கடந்ததுகொரோனவா

Feb05

10 கோடி ரூபா அபராத தொகையை செலுத்தாவிட்டால், சசிகலா கூடுத

Feb01

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள

Jun11

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அ

May19

மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகள் போதுமானதல்ல என்றும

May30

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக

Jan11

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக

Jun15

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர

May23

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை இன்று காலை போ

May22

சென்னை: தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேரை இடமா

Feb05

தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் பன்னீர

Apr30

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நொய்யல் ஆற்றில் நேற்

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (16:18 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (16:18 pm )
Testing centres