இந்தியா

 • All News
 • இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்
 இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்
Feb 06
இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்
இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான எந்த ஒப்பந்தத்தையும் அந்த நாட்டு அரசுடன் மேற்கொள்ளும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரட்டைக் குடியுரிமை ஒப்பந்தம் தொடா்பாக புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் என். கோகுலகிருஷ்ணன் எழுத்துப் பூா்வமாக கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்தியானந்த ராய் இவ்வாறு தெரிவித்துள்ளார்..
‘இந்தியா எத்தனை நாடுகளுடன் இரட்டைக் குடியுரிமை ஒப்பந்தம் செய்துள்ளது? வெளிநாட்டுப் பிரஜைகள் எத்தனை பேருக்கு இரட்டைக் குடியுரிமை கிடைத்துள்ளது? இலங்கைத் தமிழா்கள் எத்தனை போ் இந்தியக் குடியுரிமை கேட்டுள்ளனா்? இவா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க இலங்கை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் யோசனை உள்ளதா? இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தமிழா்கள் எத்தனை பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது? உள்ளிட்ட கேள்விகளை கோகுலகிருஷ்ணன் கேட்டிருந்தார்..
இக்கேள்விகளுக்கு புதன்கிழமை மத்திய இணையமைச்சா் நித்தியானந்த ராய் மாநிலங்களவையில் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய அரசியல் சாசனத்தின் 9-ஆவது பிரிவின் படி, ‘குடியுரிமைச் சட்டம் 1955’ -இன் 9 -ஆவது பிரிவு ஆகியவை இரட்டை க் குடியுரிமை வழங்க அனுமதிக்காது. இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த இலங்கைத் தமிழா்கள் தொடா்பான பதிவுகள்(ரிக்காா்டு) எதுவும் பராமரிக்கப்படவில்லை. 2006 வரை இலங்கையிலிருந்து வந்த 4, 61, 639 தமிழா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 2003, அக்டோபா் 7-இல் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி இலங்கையில் 1964 அக்டோபா் வரை இருந்த இந்திய வம்சாவளித் தமிழா்களுக்கு அந்நாட்டுக் குடியுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக அமைச்சா் நித்யானந்த ராய் குறிப்பிட்டுள்ளார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan05

எங்களுக்குக் கிடைத்துள்ள அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்ட

Jan20

பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயல் தலைவராக இருந்த ஜ

May28

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்

Jan14

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.44

May12

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் ம

Jan14

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Feb01

இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்

Jan11

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக

May28

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் பொடிச்சன்பள்ளி கி

May22

டெல்லி: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வங்கி கடன்கள

Jan03

புதுச்சேரி: புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள அடகுக்கட

Jan30

தென்னிந்திய சினி டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்

Jan26

ஜம்மு காஷ்மீர் சிறையில் 6 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள ம

Apr30

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் ச

May15

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 6 நாட்கள் பணிய

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:19 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:19 am )
Testing centres