Back
  • All News
  • வரலாற்றில் இன்று என்ன நாள்?
வரலாற்றில் இன்று என்ன நாள்?
Dec 27
வரலாற்றில் இன்று என்ன நாள்?



வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர்.

சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று என்ன நாள்? 

திசம்பர் 27 (December 27) கிரிகோரியன் ஆண்டின் 361 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 362 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் நான்கு நாட்கள் உள்ளன

1.  பேர்சியா, ஈரான் என்ற பெயரை பெற்றது – 1934
2.  தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது – 1956
3.  உலக வங்கி உருவாக்கப்பட்டது – 1945
4.  முதன் முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம்.

இன்றைய நாள் பிறப்புகள் டிசம்பர் 27:


1571 – யோகான்னசு கெப்லர், செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1630)
1773 – ஜார்ஜ் கேலி, ஆங்கிலேயப் பொறியியலாளர், அரசியல்வாதி (இ. 1857)
1797 – கலிப், இந்தியப் புலவர் (இ. 1869)
1822 – லூயி பாஸ்ச்சர், பிரான்சிய வேதியியலாளர், நுண்ணுயிரியலாளர் (இ. 1895)
1895 – சர்தார் உஜ்ஜல் சிங், இந்திய அரசியல்வாதி (இ. 1983)
1901 – மார்லீன் டீட்ரிக், செருமானிய-அமெரிக்க நடிகை, பாடகி (இ. 1992)
1913 – விருகம்பாக்கம் அரங்கநாதன், இந்தி எதிப்புப் போராட்டத்தில் தீக்குளித்து உயிர்விட்டவர் (இ. 1965)
1945 – டேவிட் ராஜேந்திரன், ஈழத்து வானொலி, மேடை நாடகக் கலைஞர் (இ. 2013)
1948 – செரார்டு தெபர்டியு, பிரான்சிய-உருசிய நடிகர்
1965 – சல்மான் கான், இந்திய நடிகர்.

இன்றைய நாள் இறப்புகள் டிசம்பர் 27:

1834 – சார்லஸ் லாம், ஆங்கிலேயக் கட்டுரையாளர் (பி. 1775)
1914 – சார்லஸ் மார்ட்டின் ஹால், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (பி. 1863)
1922 – தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பிரித்தானிய பாளி அறிஞர் (பி. 1843)
1923 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (பி. 1832)
1976 – வ. நல்லையா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1909)
1979 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானித்தானின் 2வது அரசுத்தலைவர் (பி. 1929)
2007 – பெனசீர் பூட்டோ, பாக்கித்தானின் 11வது பிரதமர் (பி. 1953)
2016 – இரத்தினசிறி விக்கிரமநாயக்க, இலங்கை அரசியல்வாதி (பி. 1933)
2018 – சீனு மோகன், தமிழக மேடை, திரைப்பட நடிகர் (பி. 1956)

இன்றைய நாள் சிறப்புகள்:

விடுதலை மற்றும் ஒற்றுமை நாள் (சுலோவீனியா)
பொக்சிங் நாள், (பொதுநலவாய நாடுகள்)

 

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (14:01 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (14:01 pm )
Testing centres