உயர் இரத்த அழுத்த பிரச்சனையானது இதயத்தை சீராக செயல்படவிடாமல் எமக்கு கடினமான சூழலை ஏற்படுத்துகிறது.
இந்த உயர் இரத்த அழுத்தம் காரணமாக பலர் பாதித்து வருகின்றனர்.
ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுமாயின், அதனை இலகுவாக வெளிப்படையான அறிகுறிகள் மூலமாக அடையாளம் காண்பது சற்று கடினமானது.
இருப்பினும் எமது உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் மூலமாக அதனை விளங்கிக்கொள்ள முடியும்.
இதயத்தின் செயல்பாடு குறைவது, சீரற்ற இரத்த ஓட்டம், சிறுநீரகங்கள் சேதப்படுத்துவது வரை இதன் பாதிப்பு இருக்கும்.
கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தத்தை சரியான சிகிச்சைகள் மூலம் சரிசெய்யவில்லை என்றால் பல அபாயங்களை நாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.
உயர் இரத்த அழுத்தமானது இதயத்தை சீராக செயல்படவிடாமல் கடினமான நிலையை ஏற்படுத்துகிறது.
இதன்காரணமாக ஏற்படும் அதிக அழுத்தத்தால் இருதயத்தில் உள்ள மென்மையான திசுக்கள் சேதமடைகிறது.
தொடர்ந்து இது இரத்த நாளங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
நம் உடலில், இரத்த அழுத்தத்தின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருந்தால், சில அறிகுறிகள் மூலமாக அதை தெரிந்துகொள்ளலாம்
பாதங்கள்
உயர் இரத்த அழுத்தம், நரம்பில் உள்ள மென்மையான திசுக்களை சேதப்படுத்தும்.
இவற்றில் சில நம் கால்களின் பாதங்களில் உள்ளன.
அப்போதுதான் கால்கள் மற்றும் பாதங்களில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால், கால்கள் குளிர்ச்சியாக மாறும்.
இதனைக் கொண்டு இலகுவில் உணர முடியும்.
மேலதிக அறிகுறிகள்
கால்கள் மற்றும் கால்களைச் சுற்றியுள்ள தோலின் நிறத்தில் திடீரென ஏற்படும்மாற்றமாகும். சிவப்பு அல்லது நீல நிறத்தில் கால்விரல்களை நாம் காணலாம்.
அதேசமயத்தில், நம் கால்கள் மற்றும் பாதங்களில் கூடுதல் கூச்ச உணர்வு இருக்கும்.
கால்களில் எதிர்பாராதவிதமாக முடி உதிர்தல் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பிற அறிகுறிகள்
பாதங்களில் பளபளப்பான தோல் இருக்கும்.கால்களில் உணர்வின்மை அல்லது பலவீனம், கால்களில் பலவீனமான துடிப்பு,
கால்களின் தோல் நிறத்தில் ஏற்படும் மாறுபாடுகள், கால் நகங்களின் வளர்ச்சி குறைந்து போவது, கால் நகங்கள் உடைவது, கால்விரல்கள், கால்கள் அல்லது பாதங்களில் வரும் புண்கள் குணமடையாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் உயர் இரத்த அழுத்தம் இருப்பதை காட்டுகிறது.