ஆன்மீகம் என்றால் என்ன மற்றும் அதஎந்த விதத்தில் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்பது குறித்து சத்குருவை ‘டைம்ஸ் நவ்' தொலைக்காட்சியில் இருந்து நந்திதா தாஸ் மற்றும் ப்ரஹலாத் கக்கர் நேர்காணல் செய்தனர். அந்த நேர்காணல் பற்றிய விளக்கம் இதோ!
சத்குரு அவர்கள் கூறியது:_ ஆன்மீகம் என்பது எந்தவொரு குறிப்பிட்ட பயிற்சியும் அல்ல. அது குறிப்பிட்ட ஒரு விதத்தில் நாம் இருக்கும் தன்மை. அந்த இடத்திற்கு செல்ல, பல விஷயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இது உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு தோட்டத்தைப் போன்றது. மண், சூரிய வெளிச்சம் அல்லது செடியின் தண்டு ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருந்தால், அது பூக்களைக் கொடுக்காமல் இருக்கலாம். அப்போது நீங்கள் வேறு ஏதாவது செய்ய வேண்டியிருக்கும். இந்த மாதிரி விஷயங்களை கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
நீங்கள், உங்களது உடல், மனம், உணர்வுகள் மற்றும் சக்தி நிலைகளை ஒரு குறிப்பிட்ட முதிர்ச்சிநிலைக்கு எடுத்து சென்றால், ஏதோவொன்று உங்களுக்குள் மலரும் - இதுதான் ஆன்மீகம். உங்களது காரண அறிவு முதிர்ச்சியடையாமல் இருந்தால், அது எல்லாவற்றையும் சந்தேகத்துடன் அணுகும். மாறாக உங்கள் காரண அறிவு முதிர்ச்சி அடைந்திருந்தால், அது எல்லாவற்றையும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் பார்க்கும் என கூறியிருந்தார்.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy