Back
  • All News
  • ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவி...
ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.எம் கருப்புக் கொடி போராட்டம்!
Feb 10
ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.எம் கருப்புக் கொடி போராட்டம்!



தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாகவும், ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியும் சி.பி.எம் திருச்சியில் போராட்டம்

திருச்சியில் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர் ஆளுநர் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்டவர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார்.  இந்தநிலையில், ஆளுநர் திருச்சி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாட்டிற்கு எதிராகவும், தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாகவும், ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திருவானைக்கோவிலில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் இன்று (பிப்.10) காலை நடைபெற்றது. 

இந்த கருப்புக் கொடி போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், ரேணுகா, பா.லெனின், கார்த்திக், மணிமாறன் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, அபிசேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி, பாலக்கரை பகுதி செயலாளரும், திருச்சி மாநகராட்சி உறுப்பினருமான சுரேஷ், பொன்மலை பகுதி செயலாளர் விஜேந்திரன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் சூர்யா, மாவட்ட செயலாளர் மோகன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி, மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆளுநர் ரவிக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காம...

Jan29

உத்தரப் பிரதேசத்தில் 11 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட...

Jan03

அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டத...

Nov11

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை செயலர்கள் பி...

Dec29

 உத்தர பிரதேசத்தின் வாராணசியில் காசி தமிழ்...

Dec29

மக்களின் நலனும் அவர்களின் ம...

Nov08

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ.), ந...

Dec29

இண்டியா கூட்டணியின் சார்பில், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கா...

Jan04

நம்முடைய இருதரப்பு ஒத்துழைப்பை வரும் ஆண்டில் முன்னேற்றுவது குறித...

Nov08

ஜம்மு அம்பல்லா (Amphalla) சிறையில் உள்ள கைதிகளுக்குத் திறன் மேம்...

Feb03

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி...

Dec29

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் குற்றப் பத்திரிகையில் க...

Dec30

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்கள...

Nov11

பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரேசில் அதிபர...

Nov02

சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில், பாஜக கொடிக...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:05 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:05 pm )
Testing centres