இந்தியா

  • All News
  • 27 வருடங்களின் பின் வீரப்பனின் கூட்டாளி கைது
27 வருடங்களின் பின் வீரப்பனின் கூட்டாளி  கைது
Feb 03
27 வருடங்களின் பின் வீரப்பனின் கூட்டாளி கைது
சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்ட சுமார், 15 ஆண்டுகளுக்கு பிறகு, அவரின் கூட்டாளி என கருதப்படும் பெண் ஒருவர் கர்நாடக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வருடங்களாக இவர் தலைமறைவாக இருந்தார்.
கர்நாடக-தமிழக வனப்பகுதிகளை கிட்டத்தட்ட தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் வீரப்பன். இவரை தமிழக அதிரடிப்படையும், கர்நாடக அதிரடிப்படையும் தீவிரமாக தேடி வந்த நிலையில், சுமார் 15 வருடங்கள் முன்பு, அதாவது 2004ம் ஆண்டு, தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில்தான், ஸ்டெல்லா மேரி எனப்படும் 40 வயதாகும் பெண்மணியை, கொள்ளேகால் கிரைம் பிராஞ்ச் பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

13 வயதில், வீரப்பன் கூட்டத்தோடு, ஸ்டெல்லாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாம். "1993ம் ஆண்டு முதல் ஸ்டெல்லா தலைமறைவாகிவிட்டார். அவர் மீது, பயங்கரவாத மற்றும் சீர்குலைப்பு நடவடிக்கைகள் (தடுப்பு) (TADA) சட்டத்தின் கீழ் வழக்கு உள்ளது. வீரப்பனின் நெருங்கிய உதவியாளரான இவர், தனது கரும்பு வயலில் இருந்து யானைகளை விரட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கியை பயன்படுத்தியதால் பொலிஸார் ஆச்சரியமடைந்தனர். "துப்பாக்கியை இயக்குவதற்கு அவருக்கு எப்படித் தெரியும் என்று போலீசார் துருவி துருவி கேள்வி எழுப்பியபோது, வீரப்பன் கும்பலுடன் அவர் கொண்டிருந்த தொடர்பு குறித்த தகவல் வெளியானது, " என்று சாம்ராஜ்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்.டி.ஆனந்த குமார் கூறினார்.

வீரப்பனோடு காலத்தில் காட்டில் வசிக்க வேண்டிய தேவை எழுந்தபோது, வீரப்பனின் கூட்டாளிகளில் ஒருவரான வெள்ளையனுடன் காதல் ஏற்பட்டது. அவரையே திருமணம் செய்து கொண்டார். வெள்ளையன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதால், வேலுசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு, வாடகை நிலத்தில் தம்பதிகள் கரும்பு விவசாயம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May20

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக இயக்கப்படும் ச

Jan20

பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயல் தலைவராக இருந்த ஜ

Apr30

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் ச

May22

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்க

May21

புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற

May22

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே

Feb02

அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா முன்ன

Jan25

குற்றப் பின்னணி உள்ளவா்கள் தோ்தலில் போட்டியிட அரசியல

Jan10

சேலத்தில் சிவப்பு பாதரசம் என்ற பெயரில் பல கோடி ரூபாய்

May20

 சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவு

Jan31

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண

May20

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த குமார் மகன் ச

Jan26

ஒக்ஸ்போட் அகராதியின் 10-ஆவது பதிப்பில் 26 புதிய இந்திய ஆங

Jan30

புதுடெல்லி தேர்தலில் தற்போதைய முதல் அமைச்சர் அரவிந்த்

Feb17

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் வரும் மார்ச் 3 ஆம் திகதி

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:09 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:09 am )
Testing centres