Back
 • All News
 • மதுபான விலை உயர்வு பற்றி பேச முடியாது?
மதுபான விலை உயர்வு பற்றி பேச முடியாது?
Feb 03
மதுபான விலை உயர்வு பற்றி பேச முடியாது?விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வருகிற 8-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்வில் பங்கு பெறுகிறார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துச்சாமி கூறுகையில்,

6 லட்சம் மதிப்புள்ள விலையில்லா சைக்கிள்கள் இன்று கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் விளையாட்டுப் போட்டிகளை மிக அருமையாக நடத்தியுள்ளனர்.அரசு சார்பாக நலத்திட்டம் நிகழ்ச்சி ஆர் எஸ் புரத்தில் நடைபெறுகிறது. ஏழை அடிதட்டு மக்கள் பயன்படும் வகையில் அமைந்துள்ளது.

மக்களோடு முதல்வர் திட்டத்தை தொடங்கி மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் நடவடிக்கை எடுத்து மிகச் சிறப்பாக மாவட்ட வாரியாக திட்டம் நடைபெற்று வருகிறது.  மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படுத்தி தீர்வு காணப்பட்டு வருகிறது. இதில் பல லட்சம் மக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. 601 பேருக்கு மனுக்களுக்கான தீர்வை நாங்கள் இன்று கொடுக்கிறோம். அதில் 11 கோடியே 53 லட்சத்தி 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் இன்று வழங்க உள்ளோம்.

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வருகிற 8-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்வில் பங்கு பெறுகிறார். அதே போன்று வருகின்ற 11ஆம் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வர உள்ளார். கோவையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் அடிக்கல் நாட்டு விழா இருந்தாலும் மிக விரைவாக திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசு மருத்துவமனை கட்டிடங்கள் மிக விரைவாக திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

இலவச மடிக்கணினி குறித்தான பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.விஜய் அரசியலுக்கு வந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, புதுசா வருபவர்களுக்கு வாழ்த்து சொல்வது தான் மரியாதை நாங்கள் விஜய் தொடங்கிய கட்சிக்கு வாழ்த்துக்கள் சொல்கிறோம். திமுகவை பற்றி மக்களுக்கு தெரியும். திமுக தனித்துவமான கட்சி.நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை தொடர்ச்சியாக செய்து வரும் தேர்தலுக்கு என்று தனியாக நாங்கள் வேலை செய்யவில்லை.

அரசு இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி திமுக தொடர்ச்சியாக மக்களுக்கு பணி செய்து வருகிறது. அந்த வகையில் தான் இப்போதும் பணி செய்து வருகிறோம்.தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு நாங்கள் பணி செய்வதில்லை. மக்களை நோக்கி எப்போதும் பணி செய்வோம்.நாம் தமிழர் கட்சி மீது வெறுப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை செய்தால் அது தவறு. ஆனால் அதைப் பற்றி நாங்கள் இப்போது கருத்து சொல்வது சரியில்லை.

மதுபானம் விலை உயர்வு குறித்து இப்போது பேசுவது சரியில்லை. முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex Mla, வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan04

சென்னையில் இன்று (ஜனவரி 4) காலை 9 மணி முதல் மதியம...

Jan25

சென்னையில் 613-வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ...

Feb04

தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர...

Dec16

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தமிழகத்தைச் சேர்...

Jan05

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச...

Jan06

 விஜயகாந்த் மறைவையொட்டி நினைவேந்தல் கட்டுர...

Feb01

தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் சில மணி நேரத்தில் மழை...

Feb01

எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என...

Jan03

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் தகுதி விண்ணப்பத்தில்...

Feb02

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்....

Feb13

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சட்டப் பேரவையில் இன்று ...

Jan05

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்ச...

Dec22

வழக்கறிஞர்களிடம் பேசி இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் முறையி...

Jan04

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் உள் தொடர்பு நோக்கங்களுக்காக இந...

Jan26

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒயில் கும்மி நடன குரு பத்திரப்பனுக்கு...

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:41 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:41 pm )
Testing centres