Back
  • All News
  • பா.ம.க தனித்து போட்டி இல்லை!
பா.ம.க தனித்து போட்டி இல்லை!
Feb 01
பா.ம.க தனித்து போட்டி இல்லை!



எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என்றும், கூட்டணி குறித்து முடிவெடுக்க பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி, நாடும் முழுதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. 

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என்றும், கூட்டணி குறித்து முடிவெடுக்க பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கு முழு அதிகாரம் உண்டு. எங்கள் கொள்கைக்கு ஒத்துவரும் கட்சியோடு கூட்டணி அமைப்போம் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பா.ம.க. முடிவு செய்துள்ளது.

எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு வழங்கப்பட்டது. மேலும் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியில்லை என பா.ம.க. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பா.ம.க. கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். மருத்துவர் ராமதாசுக்கு 'பாரத ரத்னா' தரவில்லை என்பது தான் எனக்கு பெரிய வருத்தம். கூட்டணி குறித்து முடிவெடுக்க பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு முழு அதிகாரம் உண்டு. எங்கள் கொள்கைக்கு ஒத்துவரும் கட்சியோடு கூட்டணி அமைப்போம். இளைஞர்களை பாதிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக பொதுக்குழுவிவில் பேசிய ராமதாஸ், "பா.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகளின் விருப்பப்படி தனித்துப் போட்டியிட இப்போது நாம் தயாராக இல்லை. கூட்டணி அமைத்தே பா.ம.க. போட்டியிடும். மாநில நலன், தேசிய நலன், மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும். மக்களவை தேர்தலில் குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். 12 தொகுதிகளை அடையாளம் கண்டு பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம்" என்று கூறினார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...

Jan20

தமிழகம் தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை பாலத்தின் தடுப்புச...

Jan03

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை தமிழக விளையாட்டு த...

Jan04

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை பிப். 9-ம் தேதிக்கு தள்ளிவைக...

Jan04

சென்னையில் இன்று (ஜனவரி 4) காலை 9 மணி முதல் மதியம...

Sep16

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

Dec22

வழக்கறிஞர்களிடம் பேசி இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் முறையி...

Dec24

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய வள...

Jul03

நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ம...

Dec15

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளிய...

Jan06

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர...

Nov09

இரவு தொடங்கிய மழை, காலை வரை தொடர்ந்து பெய்ததால் சாலைகளி...

Jul10

சேலத்தில் உள்ள இ.பி.எஸ் வீட்டில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள்...

Nov09

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 19 (00:54 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 19 (00:54 am )
Testing centres