பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னராக அர்ச்சனா வந்துள்ள அர்ச்சனாக்கு ஏகப்பட்ட பரிசுகளும் கிடைத்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 7
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 106 நாட்கள் கடந்து நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
கலந்து கொண்ட போட்டியாளர்கள்.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன், விசித்ரா, பூர்ணிமா, அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு, மணி சந்திரா என 23 பேர் கலந்து கொண்டனர்.
இதில் டைட்டில் வின்னராக அர்ச்சனா பிக் பாஸ் கோப்பையை தட்டித் தூக்கியுள்ளார். மேலும் இவருக்கு 50 லட்சம் ரூபாய், ஒரு வீடு, ஒரு கார் பரிசாக கிடைத்துள்ளது.டைட்டில் வின்னரை அறிவிக்கும் முன்பு கமல் அனைவரது இதயத்துடிப்பையும் தாறுமாறாக எகிற வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.