Back
  • All News
  • பசில் நாடு திரும்பியதும் ஆரம்பமாகவுள்...
பசில் நாடு திரும்பியதும் ஆரம்பமாகவுள்ள நடவடிக்கை..!
Jan 06
பசில் நாடு திரும்பியதும் ஆரம்பமாகவுள்ள நடவடிக்கை..!



இந்த ஆண்டு கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்றையதினம்(05) இடம்பெற்ற  கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். நாடளாவிய ரீதியில் வெகுவிரைவில் அரசியல் கூட்டங்களை நடத்துவோம். பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச  நாடு திரும்பியவுடன் பொது கூட்டங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் என்று ஆளும் தரப்பின் ஒருசிலர் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சகல தரப்பினருடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பொருளாதார நெருக்கடிக்கு தீரவு காணும் வகையில் மக்களால் ஏற்றுக் கொள்ளும் நபரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.

ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் கூட்டணிகள் தற்போது தோற்றுவிக்கப்படுகின்றன.கட்சி தாவல்களும் இடம்பெறுகின்றன. 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான தன்மை காணப்பட்டது.

கட்சி தாவல் என்பது இங்கு இயல்பானதாக உள்ளது. கட்சி என்ற ரீதியில் பலமாக உள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியுடன் தற்போது கூட்டணியாக இணைந்துள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடந்த காலங்களில் சகல அரசியல் கட்சிகளிலும் அங்கம் வகித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பலர் எம்முடன் இணைவார்கள் என குறிப்பிட்டுள்ளார். 
 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec24

 ''திமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் அதிகரித்து வருகின்...

Dec23

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு சித்த தள ஆயுர்வேத வைத்தியசாலைய...

Dec23

பத்து புதிய சட்டத்தரணிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதி ரணில...

Jan07

முன்னாள் அதிபர் சந்திரிக்கா...

Dec15

கட்சியினரின் தொடர் போராட்டங்கள், தொடர் கொலைகள் என நடந்து வந்த தி...

Dec25

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலே இந்த நாட்டில் நடைபெற விருக்கின்றத...

Dec15

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான ...

Jan01

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்த ...

Dec23

இந்த சமூகம் அனைத்துதுறைகளிலும் சீரழிந்துவிட்டது, எனவே நாட்டின் ந...

Jan03

நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர...

Jan03

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி அ...

Dec15

மக்களவையில் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து வண்ண புகை குப்பிகளை வ...

Jan01

வற் வரி திருத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் மக்கள் மத்தியில்...

Dec25

திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சி விரைவாக வளர்ச்சி அடைந்த...

Dec27

எதிர்வரும் ஜனவரி மாதம் நான்கு நாள் சுற்றுப்பயணமாக, இலங்கை மற்றும...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:31 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 05 (12:31 pm )
Testing centres