மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட புளும்பீல்ட் பிரிவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில்களில் நேற்று முன்தினம் காலை வேளையில் ஆலயத்தின் முன்புறம் உள்ள பாதுகாப்பு அரணில் உள்ள இடைவெளி பகுதி வழியாக ஆலயத்தின் உள்ளே சென்று அங்கு இருந்த பெறுமதிக்குரிய அம்மன் வெங்கல சிலை ஒன்றை திருடப்பட்டுள்ளது.
இது குறித்து அங்கு பணிபுரியும் பூசகர் ஆலய நிர்வாகத்திடம் கூறியதை தொடர்ந்து பரிபாலன சபையினர் மற்றும் பூசகர் இணைந்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பொலிசார் அப் பகுதியை சுற்றி வளைத்து பார்வை இட்டனர்.
நேற்று மாலை அதே அம்மன் சிலை புரவுன்ஷீக் தோட்ட புரவுன்ஷீக் பிரிவில் சாமிமலை மஸ்கெலியா பிரதான வீதி அருகில் உள்ள பேருந்துகள் தரிப்பு இடத்தில் இருப்பதைக் கண்டு மக்கள் சம்பந்தப்பட்ட ஆலயத்தின் பரிபாலன சபைக்கு தெரிவித்தனர்.
பரிபாலன சபையினர் மற்றும் பூசகர் இணைந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இது குறித்து அறிவித்தனர்.சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்று அங்கு இருந்த வென்கல சிலையை மீட்டு ஆலயத்தில் ஒப்படைத்தனர்.
அத்தோடு ஆலயத்தில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து சென்று உள்ளனர்.
நேற்று இரவு மூன்று பேர் காவல் பார்த்து கொண்டு இருந்தும் நேற்று இரவு மேலும் சில பொருட்கள் சுவாமி சிலை ஒன்று உண்டியல் மற்றும் வேறு பகுதிகளில் திருடப்பட்ட தீ பரவாமல் தடுக்க உபயோகிக்கும் 4 கேஸ் சிலிண்டர் போன்ற பொருட்கள் களவு போய் உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆலய பூசகர் மற்றும் பரிபாலன சபையினர் இன்று மீண்டும் பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்ய வந்த வேலையில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்கள் உதவி அதிகாரி மற்றும் பொலிசார் அப்பகுதிக்கு சென்று அதிரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்
அதேவேளை தோட்டத்தில் பணிபுரியும் 48 வயதுடைய ஆண் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது களவு போன பல பொருட்கள் அவரது இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் தேயிலை தொழிற்சாலையில் தீ பரவாமல் தடுக்க உபயோகிக்கும் கேஸ் சிலிண்டர் 4 ம் கை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பின்னர் இன்று சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்த உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்