பலஸ்தீன் மக்களுக்காக ஆதரவு தெரிவித்து கல்முனையில் ஆர்ப்பாட்டப்பேரணி!
காஸா பகுதியில் நடைபெற்றுவரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் கல்முனையில் வெள்ளிக்கிழமை (03) நடைபெற்றது.
ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து கல்முனை முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாசல் அருகில் உலமாக்கள், கல்முனை அனைத்துப்பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், கல்முனை பொது அமைப்புக்கள், பெருமளவிலான பொது மக்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு இஸ்ரேலின் கொடூரத்தாக்குதலைக் கண்டித்து பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
மேலும் கண்டனப்பேருரை மற்றும் பலஸ்தீன மக்களுக்காக துஆப்பிரார்த்தனையும் இதன் போது நடைபெற்றது.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy