Back
  • All News
  • முழங்காவில் -மன்னார் வீதியில் பேரூந்...
முழங்காவில் -மன்னார்  வீதியில் பேரூந்துகள்  ரேஸ்-மயிர் இழையில் உயிர் தப்பிய பயணிகள்
Nov 21
முழங்காவில் -மன்னார் வீதியில் பேரூந்துகள் ரேஸ்-மயிர் இழையில் உயிர் தப்பிய பயணிகள்



யாழ்ப்பாணம்- மன்னார் பாதையூடாக பயணித்த தனியார் பேருந்து போட்டி போட்டு முழங்காவில் பேரூந்தை முந்த முயற்சித்த நிலையில் நிலைதடுமாறி அருகில் இருந்த  மரத்தில் மோதவிருந்த நிலையில் நூற்றுக்கணக்கான பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை  யாழ்ப்பாணம் முழங்காவில் பிரதான வீதியில் இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று (18) மதியம் 3 மணியளவில் புறப்பட்ட தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முழங்காவில் முக்கொம்பன் பகுதியில் பயணித்து கொண்டிருந்த நிலையில் பின்னால் வந்த மற்றைய தனியார் பேருந்து சாரதியின் செயற்பாட்டால் நிலை தடுமாறி உள்ளது.

பின்னால் வந்த சாரதி வேகமாக வாகனத்தை செலுத்தியதுடன் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் வாகனத்தை செலுத்தி உள்ளார். இதன் காரணமாக நிலை தடுமாறிய பயணிகளுடன் மன்னார் நோக்கி வந்த தனியார் பேருந்து  அருகில் உள்ள மரத்தில் மோதும் விதமாக சென்ற நிலையில் மரத்தை சூழ இருந்த மணல் திட்டு காரணமாக விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டதுடன் பேரூந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

தொடர்ச்சியாக மன்னார் யாழ்ப்பாணம்,மன்னார் வவுனியா வீதிகளில் பேருந்து சாரதிகள் மக்களின் உயிர்களை மதிக்காது பேருந்துகளை போட்டி போட்டு செலுத்தும் சம்பவங்களும் அதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec02

மன்னாரைச்  சேர்ந்த இரண்டு குடும்பம்   ஏழு பேர் படகு மூ...

Dec07

மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்...

Nov06

மன்னார் மாவட்டத்தின் சூழலைப் பாதுகாப்பதில்  கல்லூரி மாணவர்க...

Nov21

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 7 வருடங்களாக சிறப்பாக சேவையாற்றிய...

Dec02

நடைபெற்ற  2022-2023   ஆண்டுக்கான   க.பொ.த. சாதாரண...

Nov08

நுவரேலியா தபாலகத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சிக்கு எதி...

Nov30

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி ,பாப்பாமோட்டை பகுதியில் மன்னார் ...

Nov07

சீனாவில் உள்ள பௌத்த மக்களின் உதவியுடன் இலங்கையில் வறிய மக்களுக்க...

Nov16

IDM  Nations Campus இன் 2023 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழ...

Nov30

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா நேற்று புதன்கிழமை...

Dec06

மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில்  கடந்த 2009 ஆம் ஆண...

Dec06

மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று புதன்கிழமை(6) காலை...

Nov18

நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயமான வடக்கு தென்னை முக்கோண வ...

Nov26

மன்னார்  ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்  27...

Nov07

மன் / புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை  மெய்வல்லுனர் போ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:02 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:02 am )
Testing centres