Back
  • All News
  • ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இட...
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்!....
Nov 18
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்!....



ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியாவுக்கு ஆதரவளிப்பதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது.

5 நாடுகளைக் கொண்ட ஐ.நா. சபையின் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் இந்த 5 நாடுகளும் வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்ய முடியும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 10 நாடுகள், நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளன. இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த சூழலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

கூடுதலாக 5 நிரந்தர உறுப்பு நாடுகளையும், 4 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் சேர்க்க வேண்டும் என்று பெரும்பாலான நாடுகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இணைய இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி, நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

நிரந்தர உறுப்பினர்களாக உள்ள 5 நாடுகளில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட நாள் கனவு. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தியாவை சீனா புறக்கணித்து வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் பிரான்சின் நிரந்தரப் பிரதிநிதியான நிக்கோலஸ் டி ரிவியர், பாதுகாப்புக் குழுவின் அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவத்திற்கு சீர்திருத்தம் அவசியம் என்று தெரிவித்துள்ளார். விரிவாக்கப்பட்ட புதிய நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உட்பட கவுன்சில் 25 உறுப்பினர்களை கொண்டிருக்கலாம் ரிவியர் பரிந்துரை செய்துள்ளார்.
“நிரந்தர உறுப்பினர்கள் உட்பட ஆப்பிரிக்க நாடுகளின் வலுவான இருப்பைக் காண நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஆதரவளிப்பதாக பிரான்ஸ் உறுதியளித்தது

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec06

கிழக்கு ஆபிரிக்க பிராந்திய படையானது கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இ...

Nov05

இஸ்ரேலின் தாக்குதல்  காரணமாக காசாவிலிருந்து 11 இலங்கையர்கள்...

Nov02

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்க...

Nov05

அமெரிக்காவில் நோயாளிகளுக்கு அதிக இன்சுலின் கொடுத்து ...

Nov06

ஜப்பானில் பாலத்தில் புகைப்படம் எடுத்துகொண்டிருந்த பெண் தவறி விழு...

Nov18

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியாவுக்கு ஆதரவளி...

Nov27

அமெரிக்காவில் குருத்துவாராவுக்கு சென்ற இந்திய தூதரை காலி...

Nov08

பலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக அறிவித்துள்ள இ...

Nov11

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் 20 நாளுக்கு மேலாக தொடர்...

Nov02

இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ...

Nov12

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இந்திய வம்சா...

Nov26

தற்காலிக அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, முதல்கட்டமாக 25 பிணைக் க...

Dec08

ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய பிரமாண்டமான ராக்கெட் குண்டுகளை கைப...

Nov03

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வேட்பா...

Nov10

ஹாசாவில் 3 நாட்களுக்கு மனிதாபிமான போர் நிறுத்தம் மேற்கொள்ள பேச்ச...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:03 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:03 am )
Testing centres