Back
  • All News
  • மும்பையில் ஆதித்ய தாக்கரே மீது வழக்கு...
மும்பையில் ஆதித்ய தாக்கரே மீது வழக்கு!...
Nov 18
மும்பையில் ஆதித்ய தாக்கரே மீது வழக்கு!...



அதிகாரப்பூர்வ அனுமதியின்றி லோயர் பரேலில் டெலிஸ்லே பாலத்தின் 2-வது பாதையை திறந்து வைத்ததற்காக சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் தலைவர் ஆதித்ய தாக்கரே மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

மும்பையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், டெலிஸ்லே பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெற்கு மும்பையையும் லோயர் பரேலையும் இணைக்கும் வகையிலான இப்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. தொடர்ந்து, கரி ரோட்டை லோயர் பரேலுடன் இணைக்கும் மற்றொரு பகுதி செப்டம்பரில் திறக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பாலத்தின் மீதமுள்ள வேலைகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட பாலம் முடிவடையும் நிலையில் இருந்தாலும், பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்று இன்னும் சான்றளிக்கப்படவில்லை. இந்த சூழலில், இப்பாலத்தின் 2-வது பகுதியை அப்பகுதியின் எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே திறந்து வைத்திருக்கிறார்.

இதையடுத்து, ஆதித்ய தாக்கரே மீது பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பி.எம்.சி.) சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரில் பாலம் இன்னும் முழுமையடையாததோடு, பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்றும் சான்றளிக்கப்படவில்லை. அப்படி இருக்க, பாலத்தை திறந்து வைத்த ஆதித்ய தாக்கரேவின் செயல் சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பாலத்தை முன்கூட்டியே பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் குடிமை அமைப்பு கவலை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, ஆதித்ய தாக்கரே, சுனில் ஷிந்த் மற்றும் சச்சின் அஹிர் ஆகியோருக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) 143, 149, 336 மற்றும் 447 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb07

கர்நாடகா அரசு புதன்கிழமை டெல்லியில் போராட்டம் நடத்தும், வியாழக்...

Jan04

நம்முடைய இருதரப்பு ஒத்துழைப்பை வரும் ஆண்டில் முன்னேற்றுவது குறித...

Jan21

மாலைதீவில் இந்திய விமானத்தை பயன்படுத்த அந்நாட்டு அதிபரின...

Feb01

இந்த பட்ஜெட் ஏமாற்றத்தை தந்திருக்கின்றது. விவசாயிகளுக்கு பெரிய ...

Nov15

10, 12 வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளத...

Feb03

எஸ்எஃப்ஐ உறுப்பினர்கள் தனது காரைத் தாக்கியதாகவும், சட்டம் ஒழுங்...

Dec23

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்...

Jan28

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா; பா.ஜ.க உடன் இணைந்து மீண்...

Jan04

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தே...

Jan03

மனைவி, மகன், மகள் சம்மதிக்க மறுத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில்...

Dec30

இந்தியாவில் மீன் விற்க சென்ற நபருக்கு லொட்டரியில் ஒரேநாள...

Nov09

தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலைய...

Nov18

மக்கள் பிரச்சினையைப் பற்றி விவாதிக்காமல் ஆளுநர் விவகாரத்தை திமுக...

Nov05

கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில...

Dec15

மத்தியப் பிரதேச புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்ற மறுநாள...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (23:18 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (23:18 pm )
Testing centres