Back
  • All News
  • இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் ...
இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல்!
Nov 17
இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல்!



இலங்கைக்கு ஷியான் யாங் வாங் -03 என்கிற இன்னொரு உளவுக்கப்பலை அனுப்ப, அந்நாட்டிடம் சீனா அனுமதி கோரியிருக்கிறது. இதற்கு இந்தியத் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சீனா, கடல் ஆராய்ச்சி என்கிற பெயரில் தனது நாட்டு உளவுக் கப்பல்களை அடிக்கடி இலங்கைக்கு அனுப்பி வருகிறது. குறிப்பாக கடந்த 2 வருடங்களாக சீன உளவுக் கப்பல்களின் வருகை அதிகரித்திருக்கிறது. இக்கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படுவதாக சீனா கூறி வருகிறது.

ஆனால், உண்மையில் அக்கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே அனுப்பப்படுவதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. அதாவது, சீனக் கப்பல்கள் இலங்கை கடல் பகுதியில் நின்றபடியே, தென் மாநிலங்களில் இருக்கும் இந்தியப் படைகள் உள்ளிட்டவற்றை உளவு பார்ப்பதாக  இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.

இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆகவே, சீனாவின் உளவுக் கப்பலை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா தரப்பில் இலங்கை அரசிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது.

ஆனாலும், இலங்கை அரசால் சீனக் கப்பல் வருகையைத் தடுக்க முடியவில்லை. காரணம், சீனாவிடமிருந்து இலங்கை அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகளவில் கடன் பெற்றிருக்கிறது. அதோடு, ஹம்பந்தோடா துறைமுகத்தையும் 99 வருட குத்தகைக்கு இலங்கை அரசுக்கு தாரைவார்த்திருக்கிறது.

அந்த வகையில், சீனாவின் யுவான் வாங் -5 என்கிற உளவுக்கப்பல் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இலங்கைக்கு வந்து, ஹம்பந்தோடா துறைமுகத்தில் ஒரு வாரம் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு ‘ஷின் யான் – 6’ என்கிற சீனாவின் மற்றொரு உளவுக்கப்பல் கடந்த மாதம் இலங்கைக்கு வந்தது.

இந்தக் கப்பல் கடந்த 2 வாரங்கள் இலங்கையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இலங்கை கடல் பகுதிக்கு வெளியே இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இக்கப்பல் கொழும்பு செல்வதற்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், எப்போது சீனா திரும்பும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான், சீனாவில் இருந்து மேலும் ஒரு உளவுக் கப்பல் இலங்கைக்கு வருகிறது. ‘ஷியான் யாங் ஹாங் – 03’ என்கிற பெயர் கொண்ட இக்கப்பல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது. இக்கப்பலை இலங்கைக்கு அனுப்ப அந்நாட்டிடம் சீனா அனுமதி கோரியிருக்கிறது. இக்கப்பலும் இலங்கை கடற்பரப்பின் பொருளாதார வளத்தை ஆராய்வதற்காகவே வருகிறதாம்.

இக்கப்பல் வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகிறது. ஜனவரி 5-ம் தேதி முதல் பிப்ரவரி 20-ம் தேதி வரை 45 நாட்களுக்கு இக்கப்பல் இலங்கை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக சீனத் தரப்பில் கூறப்படுகிறது. இந்த உளவுக் கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீனக் கப்பல் வருகைக்கு இந்தியா மீண்டும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

மேலும், அக்கப்பல் வருகைக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று இந்தியா சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov07

இந்த வருடம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் ...

Nov26

மாவீரர் தினம் நாளைய தினம்(27/11/2023)  அனுஷ்டிக்

கொழும்பில் குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கண்டுபிடிப்ப...

Dec08

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என...

Nov30

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய லங...

Nov02

பாணந்துறை, வாலான பிரதேசத்தில் இயங்கி வரும் சிறுமிகள் பாதுகாப்பு ...

Nov07

கிழக்கு மாகாணத்தில் வாயில்லா ஜீவன்களுக்காக ஜனநாயக வழியில் போராடச...

Nov29

அமைச்சரவை அமைச்சரும் இன்று பேசுவதற்கு சுதந்திரமில்லாத நபராக மாறி...

Nov05

இந்த வருடத்தில் மட்டும்  பல்கலைக்கழக பேராசிரியர்கள் 1,800 ப...

Nov05

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் இ...

Dec06

இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு உலக...

Dec08

முல்லைத்தீவு - கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக...

Nov07

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டின் பல்வேறு நீர்த்தேக்கங்களி...

Nov05

காதலன் ஒருவர் தனது காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று அதன் முகா...

Nov29

மலையகம் -200, “யாழில் மலையகத்தை உணர்வோம்" என்ற தொனிப்...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:22 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:22 am )
Testing centres