Back
  • All News
  • ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு ஆதரவு!..
ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு ஆதரவு!..
Nov 17
ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு ஆதரவு!..



அமெரிக்க நடிகையும், மனித உரிமை ஆர்வலருமான ஏஞ்சலினா ஜோலி, பாகிஸ்தானில் இருந்து பெருமளவில் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றப்பட்டதற்கு கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகள் அகதிகள் போர்வையில் பாகிஸ்தானில் தங்கி இருந்து இந்த தாக்குதலில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் எழுந்ததன் பேரில் பாகிஸ்தானில் தங்கியிருந்த ஏராளமான ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றி வருகிறது.

இதற்கு அமெரிக்கா நடிகையும், மனித உரிமை ஆர்வலருமான ஏஞ்சலினா ஜோலி, பாகிஸ்தானில் இருந்து பெருமளவில் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றப்பட்டதற்கு கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏஞ்சலினா ஜோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பல தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆதரவு அளித்துவந்தது. இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் இருக்கும் சூழ்நிலையில் பாகிஸ்தான் அவர்களை வெளியேற்றுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது.

இன்றைய ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும், கல்வி வாய்ப்பும் பறிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் எப்படி ஆப்கானிஸ்தானில் வாழ முடியும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், ” உலகளவில் மனித உரிமை பின்னடைவுக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல போர்கள், மோதல்கள் மற்றும் இடம்பெயர்வுகளை தவிர வேறு எதையும் அனுபவிக்காத ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இது ஒரு புதிய சோகம் ” என்று அவர் ஆப்கானிஸ்தான் மக்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov17

அமெரிக்க நடிகையும், மனித உரிமை ஆர்வலருமான ஏஞ்சலினா ஜோலி, பாகிஸ்த...

Dec29

இஸ்ரேல் இராணுவத்தின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டும் அகதிகளாகவு...

Dec28

கொவிட்-19க்கு பிந்தைய தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு...

Dec24

மாதவிடாய் வலியை குறைப்பதற்கு நண்பர்கள் பேச்சை கேட்டு கருத்தடை மா...

Dec12

வொரெயால் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸில் செர்ஜி...

Feb25

கர்நாடக எல்லை பகுதிகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதால்...

Nov02

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்க...

Dec12

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத் தேவையான நடவடிக்கை...

Jul04

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவுகள் குறித...

Jan04

கடந்த சில நாட்களாக உக்ரைனுக்கும் ரஷ...

Dec26

நூறு ஆண்டுகளாக பின்பற்றி வரும் வழக்கத்தினை மாற்றி உக்ரைனில் கிறி...

Jan17

ஹமாஸுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஹவுதி அமைப்பிற்கும் அம...

Dec29

மாஸ்கோ: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக...

Dec10

கனடாவில் சர்வதேசமாணவர்களுக்கு சவாலை ஏற்படுத்தும் இரண்டு சட்டங்கள...

Jan01

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென ராக்கெட் தாக்குதல் ந...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (23:24 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (23:24 pm )
Testing centres