இந்தியா

  • All News
  • பத்மஸ்ரீ விருது பெற்ற ஒரேஞ் பழ வியாபாரி
பத்மஸ்ரீ விருது பெற்ற  ஒரேஞ் பழ வியாபாரி
Jan 29
பத்மஸ்ரீ விருது பெற்ற ஒரேஞ் பழ வியாபாரி
2020-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரேஞ் பழ வியாபாரி பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மத்திய அரசு அறிவித்த பத்மவிருது பட்டியலில் பிரபலமில்லாத, சாதனை புரிந்தவர்களின் பெயர்கள் இருந்தன. அவர்களில் ஒருவர் கர்நாடக மாநிலம் தட்சிணா கன்னடா பகுதியை சேர்ந்தவர் வரரேகலா ஹஜப்பா என்பவர் ஆவார்.

இவர் சாதாரண பழ வியாபாரி ஆவார். படிக்கும் வாய்ப்பை இழந்த இவர் பள்ளிக்கூடமே இல்லாத தனது கிராமத்தில் உள்ள குழந்தைகள், படிக்கும் வாய்ப்பை இழக்க கூடாது என கருதினார். இதற்காகத்தான் தெரு, தெருவாக சென்று ஒரேஞ் பழங்கள் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஒரு பள்ளிக்கு நிலத்தை வாங்கினார்.

2000-ம் ஆண்டில்தான் முதல் முறையாக அந்த கிராமத்தில் ஹஜப்பாவின் முயற்சியால் பள்ளி அமைக்கப்பட்டது. இதில் பல ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடர்ந்து ஏழை குழந்தைகளின் படிப்புக்கு இவர் உதவி வருகிறார். ஏழ்மையான நிலையிலும் இவர் செய்துவரும் சேவையை பாராட்டி மத்திய அரசு ஹஜப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி உள்ளது.

ஹஜப்பா ஒரு முறை ஆரஞ்சு பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி இவரிடம் பழத்தின் விலையை கேட்டுள்ளனர். இவருக்கு மொழி தெரியாததால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த தம்பதி இவரிடம் பழம் வாங்காமல் சென்றுவிட்டனர்.
அப்போது முதல் தனது கிராமத்து குழந்தைகள் படித்து முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் கல்விக்கு உதவி வருவதாக ஹஜப்பா கூறினார். இவர் பள்ளி ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான குடிநீரை காய்ச்சி தரும் வேலையையும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 25 ஆம் திகதி ரேசன் கடையில் வரிசையில் ஹஜப்பா நின்றபோது அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதை அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். முதலில் அவர் இதை நம்பவில்லை. பின்னர் அதிகாரிகள் விருது அறிவிக்கப்பட்டதை எடுத்துக் கூறியதும் மகிழ்ச்சியடைந்த அவர் என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கும் நாட்டின் உயரிய விருதுகள் தேடி வருவது சந்தோஷமாக இருப்பதாக ஆனந்த கண்ணீர் வடித்தார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun29

கொரோனாவால் அச்சுறுத்தல் உச்சத்தில் இருக்கு இந்த நேரத

Jun11

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அ

Feb08

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த தேர்தலுக்கு

May25

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கோட்ட செயற்பொறிய

Jun09

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப

May25

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட

May21

ஜூன் 1-ம் தேதி இயக்கப்படவுள்ள 200 சிறப்பு ரயில்களுக்கா

Jun06

சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் உலகையே

May26

சென்னை, 

 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா வைரஸ் ப

Jan10

மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வை

Jun05

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 384 பேருக்கு வைரஸ

Jun15

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர

Jan22

துக்ளக் பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறி

May26

புதுடெல்லி: 

 

தென்கிழக்கு டெல்லியின் துக்ள

Feb13

லக்னோ நீதிமன்றத்தில் இன்று திடீரென குண்டு வெடித்தது.

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:36 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:36 pm )
Testing centres