சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகளுக்கான ஊதிய பாக்கியை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும்- ராமதாஸ்
கோத்தகிரியில் அதிக மழைப் பொழிவு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 23 செ.மீ அதி கனமழை பதிவாகி உள்ளது.
காட்டு யானை தாக்கி முதியவர் மரணம்
கோவை: ஆலந்துரை அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற கருப்பன் (73) என்ற முதியவரை ஒற்றை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
தீபாவளி பண்டிகை: 3 நாட்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இன்று முதல் 11ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,575 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 16,895 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
TANTEA தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழக (TANTEA) தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இணையாக TANTEA தொழிலாளர்களுக்கும் திருத்தி அமைக்கப்பட்ட தினக்கூலியாக நாளொன்றுக்கு ரூ.438 வழங்கிடவும் உத்தரவு.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வு ரத்து, மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (நவம்பர் 9) தமிழ்நாடு முழுவதும் 6 லட்சம் லாரிகள் ஒடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை: 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக மதுரை, கோவை, திண்டுக்கல், தேனி,திருப்பூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, மழை
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, தர்மபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்