மேஷம்
பல வழிகளில் பணம் வருவதற்கான வழிகளை கண்டறிவீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். எலெக்ட்ரிக் சம்பந்தமான தொழில்களில் முன்னேற்றம் கிடைக்கும். ஏற்றுமதி தொழிலிலும் ஆதாயம் உண்டு.
ரிஷபம்
தொழிலில் ஏற்பட்ட சவால்கள் விலகும். கமிஷன் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வீட்டில் சந்தோஷத்தை தக்க வைப்பீர்கள்.
மிதுனம்
வியாபாரத்தில் சிறிய இடையூறு ஏற்படலாம். அலைச்சல் அதிகமாகி உடல் அசதி ஏற்படும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். உங்களிடம் உதவி பெற்றவர்கள் தக்க சமயத்தில் திருப்பித் தருவார்கள். புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.
கடகம்
பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று சேரும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் தெரியும். வீடு பூமி போன்றவற்றில் செய்த முதலீடு பல மடங்காகப் பெருகி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்
தொழில் துறைகளை நிதானமாக நடத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நன்மை கிடைப்பது கடினம். அரசு ஊழியர்கள் தொழிலில் கவனம் தேவை. வரவேண்டிய பணம் தள்ளிப் போவதால் சிரமம் ஏற்படும். .
கன்னி
குடும்ப உறவில் நீடித்த சங்கடங்கள் நீங்கும். செய்த முதலீட்டில் உடனே வருமானத்தை எதிர்பார்க்காதீர்கள். பங்குச் சந்தையில் அதிக பணம் போடுவது ஆபத்து. போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிருங்கள். பொது இடங்களில் விவாதங்கள் செய்ய வேண்டாம்.
துலாம்
மற்றவர்களுக்காக நீங்கள் செய்யும் வேலைகள் தடங்கல் இல்லாமல் முடியும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு உயரும். பண வரவு அதிகமாகும் கடன் நீங்கும் தொழிலில் சிக்கலை ஏற்படுத்திய நெருக்கடிகள் விலகும்.
விருச்சிகம்
சிக்கல்களை கடந்து செல்வீர்கள். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகி நிம்மதி அடைவீர்கள். அலைச்சல் மிகுந்த தொழிலில் மாற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். சேமிப்பை அதிகரிப்பீர்கள்.
தனுசு
புத்திசாலித்தனத்தால் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். பணத்தின் மதிப்பை இப்போது உணர்வீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.. தந்தைவழி உறவுகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.
மகரம்
கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. வருமானத்திற்காக இடம் விட்டு இடம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். கணவன் மனைவி இருவரும் அனுசரித்து சென்றால் அமைதி ஏற்படும். ஜாமீன் கையெழுத்துப் போடுவதை தவிர்த்தல் நன்று.
கும்பம்
குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்வீர்கள். அரசுப் பணியாளர்களின் செல்வாக்கு உயரும். பயணங்களில் கவனம் தேவை.
மீனம்
சிறிய பிரச்சனைகள் தீரும். வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசுத் துறையில் நல்ல ஒத்துழைப்பை அடைவீர்கள். பண உதவி பெறுவீர்கள்.
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy