துனுகெதெனிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.
53 வயதுடைய குறித்த நபரின் உடலில் கிருமி நுழைந்த நிலையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை செலுத்தியதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் இடர் மதிப்பீட்டு உபகுழு தற்காலிகமாக பாவனையிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கூறியிருந்த co-Amoxiclave மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பியான Flucloxacilli ஆகிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நோயாளிக்கு இருபது நிமிட இடைவெளிக்குள் வழங்கியதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்
.இந்த மரணம் குறித்து பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதில் மாரடைப்பு மற்றும் கிருமி நுழைந்ததால் மரணம் நிகழ்ந்தது எனத் தெரியவந்துள்ளது.
co-Amoxiclave மருந்தின் பயன்பாட்டினால் ஏற்பட்ட ஒவ்வாமை எதிர்விளைவுகளால் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy