வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தரை காணவில்லை என அப் பகுதியில் தற்போது வசித்து வரும் தமிழர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா - செட்டிகுளம், பழைய புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று (09) புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது நேற்று (09) மாலையே அகற்றப்பட்டிருந்ததுடன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் (10) குறித்த நபர் தானே தனது காணியில் புத்தர் சிலையை வைத்ததாகவும், அதனை காணவில்லை எனவும் செட்டிகுளம் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் நோர்வேயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையின பெண் ஒருவரை திருமணம் செய்திருந்ததுடன், கடந்த பெப்ரவரி மாதமளவில் செட்டிகுளத்திற்கு வந்து தங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த புத்தர் சிலையை அவர் தனது காணிக்கு முன்னால் உள்ள அரச காணியில் வைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி
இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழ்தவர
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம
இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்
நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து
கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி
கப்பிடல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திர
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர்
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொ
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில
இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொர
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ
