கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த 10ம் திகதி இரவு 9.30 மணியளவில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொலையைச் செய்தாரா என்பதை உறுதிப்படுத்த அவரது DNA மாதிரிகள் மற்றும் இறந்த பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ சிப்பாயின் விரல் நகங்கள் மற்றும் சாரத்தில் சேறு படிந்திருந்த நிலையில் அவர் மீதான சந்தேகம் வலுப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபரான இராணுவ சிப்பாய் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப
காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற
மட்டக்களப்பு - ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல்
வடக்கு மாகாணத்தில் மேலும் 130 பேருக்குக் கொரோனா வைரஸ் த
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்கா
ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில
இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்ற
கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங
2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்த
எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச
