வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்டு செல்வதற்கான சுகாதார அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வட மாகாணத்தின் சில பகுதிகளில் கால்நடைகளிடையே பரவும் வைரஸ் தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல குறிப்பிட்டுள்ளார்.
அம்மை நோய் தொற்றுக்குள்ளான சுமார் 25 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கூறிய அவர், கால்நடைகள் இடையே இந்த தொற்று தொடர்ச்சியாக நீடிக்காது என தெரிவித்துள்ளார்.
அம்மை நோய் தொற்றுக்குள்ளான கால்நடைகளை தனியாக பராமரிப்பதனூடாக தொற்று பரவும் வீதத்தை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் வட மாகாணத்தில் நோய் தொற்றுக்குள்ளான கால்நடைகளின் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல
தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப
இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா்
கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை
கதிர்காமம் - வெடிஹிதி கந்த வீதியில் இன்று (ஏப்ரல் 02) பிற
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிப்பதில் கொரிய ச
மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ
கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தா
குற்றவாளிகளை எவ்வித விசாரணையும் இன்றி விடுதலை செய்யு
சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதி
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்
