தமிழில் 'பிரம்மன்' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் லாவண்யா.
திரிபாதி, 'மாயவன்' படத்திலும் நடித்தவர் தற்போது 'தணல்' படத்தில் நடித்து வருகிறார். இதைவிட தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
லாவண்யா திரிபாதிக்கும், தெலுங்கின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜுக்கும் திருமண நிச்சயதார்த்தமும் முடிந்துள்ளது.
விரைவில் திருமணம் நடக்க உள்ளதால்,சிரஞ்சீவி வீட்டு மருமகள் ஆவதால் இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று இயக்குனர்களிடம் லாவண்யா திரிபாதி தெரிவித்து விட்டாராம். ஏற்கனவே அரைகுறை ஆடையில் நடிக்க ஒப்பந்தமான சில படங்களில் இருந்தும் வெளியேறி விட்டாரென சொல்லப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பு கவர்ச்சி காட்டிய பல நடிகைகள் திருமணத்தின் பிறகு அவைகளை தவிர்த்துக் கொள்வது சினிமாவில் வாடிக்கையாக உள்ளது.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy