கனடாவில் காட்டுத்தீ காரணமாக 165,000 சதுர கிலோமீட்டர் பரப்பு தீக்கிரையாகியுள்ள நிலையில், செப்டம்பர் மாதத்திலும் காட்டுத்தீ பரவுகை தொடர்ந்தும் நீடிக்கும் என கனடிய இயற்கை வள முகவர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடாவில் சுமார் 6174 இடங்களில் காட்டுத்தீ பரவியதாகவும் இதில் தற்பொழுது ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவுகை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பரவுகைகளில் சுமார் 800 இடங்கள் காட்டுப் பகுதிக்குள் அடங்காதவை என தெரிவிக்கப்படுகிறது.
காட்டுத்தீ காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர நேரிட்டுள்ளதுடன் பெரும் எண்ணிக்கையிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் பல இடங்களில் காட்டுத்தீ பரவுகை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy