தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவுள்ளது ஸ்ரீலங்கன் விமான சேவை
இலங்கை விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கான விருப்பங்களை இலங்கை அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக சாத்தியமான முதலீட்டு நிறுவனங்களான எமிரேட்ஸ், டாடா சன்ஸ் மற்றும் அதானி குழுமம் போன்றவைகளுடன் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றதாக கூறப்படுகிறது.
இந்தியா, பங்களாதேஸ் மற்றும் நேபாளத்திற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பிராந்திய மேலாளர் வீரபெருமாள் இரவீந்திரன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின்போது இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் குளிர்கால கால அட்டவணையின் போது கொழும்பு மற்றும் திருவனந்தபுரம் இடையிலான தனது சேவைகளை வாரத்திற்கு ஆறு தடவைகளில் இருந்து ஏழு தடவையாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடந்த மாதங்களில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கான போக்குவரத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதால் அது சாத்தியமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy