சுவிட்சர்லாந்தில் இந்து கோவில்கள் குறிவைக்கப்பட்டு கொள்ளையிடப்படும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும், கோவில் நிர்வாகத்தினர் இந்த விடயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
சுவிட்சர்லாந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் நடுவில் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது யாவரும் அறிந்தது. சுவிஸ் நாட்டின் சட்டம் குற்றவியல் பின்னணி கொண்ட குடியேற்றக்காரர்களுக்கு எதிராக கடுமையாக்கப்பட்டு காணப்படுவதால், ஏனையா நாடுகளுடன் ஒப்பிடுகையில் தொடர்கொள்ளைகள் பொது இடங்களில் நடைபெறுவது குறைவாக இதுவரை காணப்பட்டு வந்துள்ளது.
ஆனால் கடந்த வருடம் முதல் இந்துக்கோயில்கள் திட்டமிட்டுக் குறிவைத்துக் கொள்ளையிடப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகத்தினர் இந்த விடயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
கடந்த ஓகஸ்ட் 2023 முதல் இன்றுவரை 20இற்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களின் பூட்டுக்கள் உடைக்ககப்பட்டு நள்ளிரவிலும் அதிகாலையிலும் தொடர் கொள்ளைகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொள்ளைகள் காரணமாக இந்துக்கோவில்களுக்கு பொருள் இழப்புக்களும், சமய நெறிகள் மீறிய இடராகவும் உள்ளது.
கோவில்களில் உள்நுழையும்போது கடைப்பிடிக்கப்படும் திருத்தன்மை கொள்ளையர்களால் மீறப்பட்டதுடன், பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றார் கோவில் நிர்வாகத்தில் முக்கிய பதவி வகிக்கின்ற ஒருவர்.
கோவில்களின் கண்காணிப்பு நிகழ்ப்படக் கருவிகளில் கொள்ளையர்களின் பதிவும் கண்டெடுக்கப்பட்டதுடன், சில இடங்களில் கொள்ளையர்களின் கையடையாளமும் பொலிஸாரால் பதிவுசெய்யப்பட்டுள்ளது
சில கோவில்களில் கொள்ளை நடவடிக்கைகளில ஈடுபட்ட கொள்ளையர்கள் பிரான்ஸ் நாட்டு வண்டி இலக்கத்தகடுடன் வந்திருப்பதனையும், அவர்களின் இருவர் வெள்ளை நிறத்தவர் எனவும் ஒருவர் தமிழராக இருக்கலாம் எனும் ஐயமும் நிலவுகின்றது.