சிறப்பு பார்வை

  • All News
  • மனதை துள்ள வைக்கும் மஞ்சத்தாலி பாடல்
மனதை துள்ள வைக்கும் மஞ்சத்தாலி  பாடல்
Jan 26
மனதை துள்ள வைக்கும் மஞ்சத்தாலி பாடல்


ஈழத்து கலைஞர்களின் அண்மிய கலைத் துறைசார் படைப்புகள் தமிழ்மக்கள் பரந்துவாழும் பல பிரதேசங்களிலும் விரும்பி நோக்கப்படுகின்ற சூழலில் யாழிலிருந்து நேற்று வெளியான பாடல் ஒன்று பலத்த வரவேற்பை பெற்றிருக்கின்றது . மஞ்சத்தாலி என்கின்ற ஒரு காணொளிப்பாடலே மேற்படி வரவேற்பை பெற்றுவருகின்றது .

ஏற்கனவே அஞ்சல என்கின்ற துள்ளலிசை கானா பாடல் இன்றும் பல
தேசங்களிலும் ஒலித்துவருகின்ற நிலையில் அதன் தொடர்ச்சியாய் அஞ்சல ஒன்று மற்றும் இரண்டு ஆகிய
பாடல்களை இயக்கிய இயக்குனர் மச்சி
அஜினோவின் இயக்கத்தில் இந்தப்பாடல் வெளியாகியிருக்கின்றது .


அஞ்சல பாடல்களின் நாயகன் றெக்சன் விக்கி மற்றும் ரெமோ நிஷா ஆகியோர்
இந்தப்பாடலின் நடனத்தில் தங்கள் திறமைகளை நன்கு காட்டியுள்ளனர் .

குறிப்பாக இந்தப்பாடலின் காண்பிய உருவாக்கத்தில் ரெஜிமோகனின் காணொளி படப்பிடிப்பு
அதாவது கமரா மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கின்றது .பாடலின் பலத்திற்கு மிகப்பிரதானம் இதுவே .

நல்ல அழகிய வரிகளினூடே நல்ல இசையும் நல்ல பாடகளர்களினதும் கூட்டிணைவில் பாடல் பலம் .

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நடனத்தை இயக்கியிருக்கும் நடன இயக்குனர் கண்ணா உதய் அவர்கள் மீண்டும் தனித்துத்தெரிகிறார் .படத்தொகுப்புக்கூட கதிரின் கைவண்ணத்தில் அழகாகயிருக்கின்றது .

மொத்தத்தில் மச்சி அஜினோவின் வித்யாசமான நகர்வுகளில் இந்த மஞ்சத்தாலியும் பேசப்படுமளவிற்கு சிறப்பாக வந்திருக்கின்றது .

அனைவரிற்கும் வாழ்த்துக்கள் .


சமூக ஊடகங்களில் யாழ்சிறி :

  • யாழ்சிறி பேஸ்புக்
  • யாழ்சிறி ட்விட்டர்
  • யாழ்சிறி யு டியூப்
  • Share News