இந்தியா

 • All News
 • மாற்றுத்திறனாளி எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்ம விருது
மாற்றுத்திறனாளி எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்ம விருது
Jan 26
மாற்றுத்திறனாளி எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்ம விருது
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு டில்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவிக்க இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சேவை, ஆன்மிகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் மாற்றுத்திறனாளி சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜெகதீஷ் லால் அவுஜா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷரீஃப், கேரளாவை சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் மூழிக்காள் பங்கஜாக்சி, ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்த கர்நாடக பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பா ஆகியோர் என 21 பேர் பத்ம விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் ஆன்மிகத் தலைவர் பங்காரு அடிகளார், சமூக சேவகர் மதுரை சின்னப்பிள்ளை, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், அறுவைச் சிகிச்சை நிபுணர் ராமசாமி வெங்கடசாமி, கண் மருத்துவ அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆர்.வி. ரமணி, இசைக் கலைஞர் "டிரம்ஸ்' சிவமணி, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், நடிகர் பிரபுதேவா ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருது பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
முன்னாள் வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோரும் இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர், பிரபல கால்பந்து வீரர் சுனில் சேத்ரி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு பத்ம விருதுக்கு 50,000 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr27

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்ப

May26

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும்

May19

மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகள் போதுமானதல்ல என்றும

Jun04

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம்  

May21

ஆயுஷ்மான் பாரத் திட்டம், நாட்டின் கிராமப்புறங்களைச் ச

May25

செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக

Feb01

பட்ஜெட் உரையை தொடர்ந்து 2.45 மணி நேரமாக வாசித்த நிர்மலா சீ

May19

நேற்று மே 18 அன்று மாலை சரியாக 6.10 மணியளவில் நாம் தம

Jan05

சூடான் நாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த மூன

May15

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 6 நாட்கள் பணிய

May14

மது விற்பனையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அமல்

Dec21

நாட்டின் பொருளாதாரம் தொடா் சுணக்க நிலையிலிருந்து விரை

Feb03

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய உயிர்க்கொல்லி நோயான க

Feb01

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதிக்கப

Jun12

புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் பெரிய ம

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (17:04 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (17:04 pm )
Testing centres