சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி ஒரு கல்வி வலயத்தில் இருந்து 30 பேர் என நாடு முழுவதிலும் உள்ள 99 வலயங்களைச் சேர்ந்த 2970 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புலமை பரில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5000 உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருமுறையும் சாதாரண தரப் பரீட்சை வெளியாகி, க.பொ.த உயர்தரம் ஆரம்பமாக முன்னர் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் பத்திரிகை ஊடக விளம்பரப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடித
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த ம
மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்த
நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும்
நுவரெலியாவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி
மகிந்த ராஜபக்ச தனது 2 பதவிக்காலம் முடிவடைந்ததும் ஓய்வ
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்க
நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளு
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ
ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த க
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை அ
புஸ்ஸலாவை இந்து தேசியக் கல்லூரியின் நவராத்திரி கலைவி
கடந்த சில தினங்களில் கோவிட் தடுப்பு செயலூக்கியினை பெற
