வளர்ந்து வரும் நாடுகளின் விருப்பங்கள், தொலைநோக்கு ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் பிரதிபலிக்க வேண்டும் என்றும் ஐ.நா. சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் என்றும் இந்தியா உள்ளிட்ட 34 நாடுகள் ஐ.நா.சபையை வலியுறுத்தியுள்ளன.
இந்தியா, பிரேசில், வங்கதேசம் மற்றும் தென்அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அளித்துள்ள கடிதத்தில், சமகாலத்திற்கு ஏற்ற வகையில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான முக்கிய அங்கமாகத் திகழும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளன.
வளர்ந்து வரும் சவால்கள், வறுமை, காலநிலை மாற்றம், தொற்றுநோய்கள், உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, சர்வதேச பயங்கரவாதம் ஆகியவற்றுக்கான தீர்வுகளை வழங்க விரிவான சீர்திருத்தம் அவசரமானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சபையில் முன்னேற்றம் இல்லாதது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்கள், கொள்கைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
நிரந்தரம் மற்றும் நிரந்தரமற்ற வகைகளில் பணியாற்ற சிறு தீவுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் ஆப்பிரிக்காவிற்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சபையின் விரிவான சீர்திருத்தத்திற்கு ஐக்கிய நாடுகள் கைகோர்க்க வேண்டும் எனவும் 34 நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது என
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அப்பா விஜயக்குமா
ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்க
ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏக
இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரால்
நாட்டின் சனத்தொகையில் 63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறை
சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வரு
யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுத
முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரர் எட்வர்ட் ஸ
அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந
புனர்வாழ்வு பணியகத்தை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட ச
இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லிய
