உலகம்

 • All News
 • சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு மூழ்கியதில் 61பேர் உயிரிழப்பு!
சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு மூழ்கியதில் 61பேர் உயிரிழப்பு!
Sep 23
சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு மூழ்கியதில் 61பேர் உயிரிழப்பு!

சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்த படகு மூழ்கியதில் 61 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லெபனான் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.உயிர் பிழைத்த 20 பேர் தெற்கு சிரியாவின் டார்டஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.வியாழக்கிழமை படகு மூழ்கியபோது அதில் 120 முதல் 150 பேர் வரை பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் இன்னும் கூறவில்லை ஆனால் கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் மீட்பு முயற்சி நடந்து வருகிறது.லெபனான் துறைமுக நகரமான திரிபோலிக்கு அருகிலுள்ள மின்யேஹ் நகரிலிருந்து கப்பல் புறப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.ஐரோப்பாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மூழ்கியதாக நம்பப்படும் படகில், லெபனான், சிரிய மற்றும் பாலஸ்தீனிய நாட்டினர் பயணித்ததாக கூறப்படுகின்றது. இதில் சில பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குகின்றனர்.லெபனானில் 1.5 மில்லியன் சிரிய அகதிகளும் மற்ற நாடுகளைச் சேர்ந்த 14000 அகதிகளும் இருப்பதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான அகதிகள்இங்கு வசிக்கின்றனர்.எவ்வாறாயினும் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது கொவிட்-19 மற்றும் 2020 பெய்ரூட் துறைமுக வெடிப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்டது. 80 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் உணவு மற்றும் மருந்துகளை வாங்க சிரமப்படுகிறார்கள்.இந்த நிலைமை நாட்டின் புலம்பெயர்ந்த மக்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களில் பலர் ஐரோப்பா உட்பட வேறு இடங்களுக்கு தப்பிச் செல்லத் தேர்வு செய்கிறார்கள்.இந்த மாத தொடக்கத்தில் லெபனானில் இருந்து ஐரோப்பாவுக்கு குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு துருக்கியின் கடற்கரையில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். நான்கு படகுகளில் இருந்து 73 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep25

ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்

Mar06

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி

Jul11

விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி

Jul05

துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நக

Aug21

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்த

Nov21

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் காலை 9

Sep17

விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வர்த்தக ரீதியான முதல்

Mar20

துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்

Jun04

உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ

May03

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற

May01

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர

Jun18

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Apr26

ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்

Apr17

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராம

Mar07

உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 01 (14:48 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 01 (14:48 pm )
Testing centres