இலங்கை

 • All News
 • அடக்குமுறைகளுக்கு எதிரான தொழிற்சங்க போராட்டம் தொடரும்- ஜீவன் தொண்டமான்!
அடக்குமுறைகளுக்கு எதிரான தொழிற்சங்க போராட்டம் தொடரும்- ஜீவன் தொண்டமான்!
Sep 23
அடக்குமுறைகளுக்கு எதிரான தொழிற்சங்க போராட்டம் தொடரும்- ஜீவன் தொண்டமான்!

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளது. இது ஆரம்பம் மட்டுமே கம்பனிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான எமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதற்கு கட்சி தொழிற்சங்க பேதமின்றி தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டு ஒத்துழைப்பு வழங்கினர். இதனால் தோட்டத்திலிருந்து ஒரு கிராம் தேயிலைகூட வெளியில் செல்லவில்லை.இந்நிலையில் தொழிலாளர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்பதற்கு பெருந்தோட்ட நிறுவனம் இணக்கம் தெரிவித்து, எழுத்துமூல உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.இதனையடுத்து மஸ்கெலியா தோட்டப்பகுதிகளுக்கு இன்று களப்பயணம் மேற்கொண்ட ஜீவன் தொண்டமான், தொழிலாளர்களுடன் கலந்துரையாடி தொழிற்சங்க நடவடிக்கைக்காக கிடைத்த வெற்றியை பற்றி மக்களுக்கு தெளிவுப்படுத்தினார்.அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் நுவரெலியா மாவட்டத்தில் 10 தொழிற்சாலைகளும், பதுளையில் 3 தொழிற்சாலைகளும் இருந்தன. இவற்றில் இருந்து கொழுந்தை வெளியில் கொண்டு செல்ல நாம் அனுமதிக்கவில்லை.மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம், கூட்டு ஒப்பந்தத்தை மதிப்பதில்லை, பேச்சுகளுக்கு வருவதும் இல்லை. தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்து பேச்சுக்கு வந்தனர்.எழுத்துமூல உத்தரவாதத்தை வழங்கினர். நிலுவை கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. நாளைக்கும் நிலுவை பணம் கிடைக்கும்.அனைத்து தொழிற்சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்கின. நாம் மட்டும் பேர் போட முடியாது. மக்களின் பிரச்சினை தீர்ந்தால் சரி. இனி நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கிடைக்கும் – என்றார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul27

இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள

Sep21

அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டு

Sep21

தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள

Mar23

        Gallery

Jan30

இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கை

Feb18

யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியி

Mar03

இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று ம

Jan30

நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து

Mar17

இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்

Jun06

வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை டொலர்

Feb03

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும

Aug31

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் க

Jan27

வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்

Jun13

அரசின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்

Mar31

மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்த

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 01 (12:41 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 01 (12:41 pm )
Testing centres