உலகம்

 • All News
 • ஈரானில் அமைதியின்மை.
ஈரானில் அமைதியின்மை.
Sep 23
ஈரானில் அமைதியின்மை.

ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள அமைதியின்மையால், குறைந்தது 31 பொது மக்கள் உயிரிழந்திருப்பதாக மனித உரிமை குழுவொன்று தெரிவித்துள்ளது.ஆனால், இந்த எண்ணிக்கையை மறுத்துள்ள அரசாங்கம், இதுவரை 17பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.எட்டாவது நாளாக தொடரும் இந்த போராட்டங்கள் 80 பெருநகரங்கள் மற்றும் நகரங்களுக்கு பரவியுள்ளன.வட மேற்கிலுள்ள சாகேஸ் நகரை சேர்ந்த 22 வயதான குர்து இன பெண்ணான மாசா அமினி, தெஹ்ரானில் அவருடைய சகோதரரோடு இருந்தபோது, தலைமுடியை ஹிஜாப்பால் மறைப்பது மற்றும் தளர்வான ஆடையால் முழு உடலையும் மறைக்க உத்தரவிடும் ஹிஜாப் சட்டத்தை மீறியதாக ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமுலாக்கும் பொலிஸ்துறையால் கைதுசெய்யப்பட்டார்.பொலிஸ்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அமினியின் தலையில் பொலிஸ்துறையினர் பிரம்பால் அடித்ததாகவும், பொலிஸ்துறையினரின் வாகனத்தில் அவரது தலையைக் மோதச் செய்ததாகவும் தகவல்கள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் தற்காலிக உயர் ஆணையர் நடா அல்-நஷிப் தெரிவித்தார்.தாக்குதலுக்கு பிறகு 3 நாட்கள் கோமா நிலையில் துன்பப்பட்டு, மாசா அமினி, கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் பொலிஸ்துறையினர், அவருக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், அமினி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.பொலிஸ்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததன் விளைவாக அங்கு நடந்துவரும் போராட்டத்தைப் பெண்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர். 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

 ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர

Mar03

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அம

Apr22

ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைன் பகுதிகளில் பொதுமக்களை

Mar03

உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணி

Sep16

வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்

Mar06

உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ ஹெலிகோப்டேரை அந்த நா

May21

நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீன

Mar07

ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள்

Mar24

உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி

Mar05

 உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோன

May20

உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற

May27

மரிக்கா பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்

Mar02

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Feb26

உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவ

May17

ரஷ்யாவின் சக்திவாய்ந்த மல்டிபிள் ராக்கெட் லாஞ்சரை உக

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 01 (13:34 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 01 (13:34 pm )
Testing centres