உலகம்

 • All News
 • கொரோனா தரவுகளை சீனா பகிர்ந்து கொள்ள வேண்டும்!...
கொரோனா தரவுகளை சீனா பகிர்ந்து கொள்ள வேண்டும்!...
Jan 01
கொரோனா தரவுகளை சீனா பகிர்ந்து கொள்ள வேண்டும்!...

கொரோனா தொற்று பாதிப்பு குறித்த உண்மையான தரவுகளை தவறாமல் பகிர்ந்து கொள்ளுமாறு சீனாவை உலக சுகாதார அமைப்பு நெருக்கடி தந்துள்ளது. சீன அரசு பூஜ்ய கொரோனா கொள்கையை தளர்த்திய பின்னர் மீண்டும் அங்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையே, தினசரி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியிடுவதை சீனா நிறுத்தி உள்ளது. இதனால் பாதிப்பு, பலி குறித்த எந்த தகவலும் வெளி உலகுக்கு தெரியாமல் மறைத்து வருகிறது.இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் குழு சீன பிரதிநிதிகளை சந்தித்தனர்.  அப்போது கொரோனா பாதிப்புகள், தடுப்பூசி, சிகிக்சை உள்ளிட்டவை குறித்து சீன  அதிகாரிகளிடையே விரிவாக விவாதிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையில், ‘கொரோனா பாதிப்பு தொடர்பான துல்லியமான தரவுகளை வெளியிடுவதில் சீனா வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.அந்த தகவலை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். வைரசின் மரபணு வரிசை முறை, மருத்துவமனையில் அனுமதித்தல், ஐசியூ பிரிவில் சேர்த்தல், இறப்புக்கள் மற்றும் போடப்பட்ட தடுப்பூசிகள், தடுப்பூசி இருப்பு, குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள், 60வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்ட நிகழ்நேர தரவுகளை சீனா பகிர்ந்து கொள்ள வேண்டும்.தொற்று பாதிப்பில் உள்ளவர்கள் கடுமையான நோய் மற்றும் இறப்பில் இருந்து பாதுகாப்பதற்கு தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி அவசியமாகும். 3ம் தேதி சார்ஸ்-கோவிட்-2 வைரஸ் குறித்த தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டத்தில் வைரஸ் மரபணு வரிசை முறை குறித்த விரிவான தகவல்களை சீன விஞ்ஞானிகள் வழங்குவதற்கு முன்வர வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.சவாலை சமாளிப்போம் அதிபர் ஜின்பிங் உரை

இதற்கிடையே, ஆங்கில புத்தாண்டையொட்டி, சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் அவர், ‘‘கொரோனா பரவல் காரணமாக சீனாவுக்கு இந்த புத்தாண்டில் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. இதுவரை இல்லாத பிரச்னைகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த கடினமான சவால்களை சமாளித்து பயணிப்பது எளிதான விஷயமல்ல” என்று கூறினார். 


வரவிருக்கும் நிகழ்வுகள்
May14

சீனாவின் தென்மேற்கு நகரம், பன்னிங். இங்கு பிறந்த நாள் வ

May05

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்

Mar02

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போர

Mar20

துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்

May28

ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டொலருக்கு வாங்குவதாக ஒப்

Feb13

உடலுறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒன்

Mar15

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்

Sep14

இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்

Mar12

ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதற

Sep29

இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்த

Sep07

கோனாக்ரி: மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, கடந்த 1958ம் ஆண

Jan28

போலாந்தில்  கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையில

Feb19

ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுக

May31

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட

Mar16

ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 07 (17:43 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 07 (17:43 pm )
Testing centres