யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியின் வீடியோ உரையாடலைப் பதிவு செய்து அதை வைத்து மிரட்டி அவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவியுடன் இளைஞர் ஒருவர் வீடியோ அழைப்பின் மூலம் சில மாதங்களுக்கு முன்னர் உரையாடியுள்ளார்.
இதன்போது அந்த உரையாடலைப் பதிவு செய்துள்ளார்.
மாணவியுடனான உரையாடல் பதிவை தனது உறவினரான இன்னொரு இளைஞருக்கும் குறித்த இளைஞர் அனுப்பியுள்ளார்.
அவ்வாறு தனது நண்பனின் மூலம் கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
அதேவேளை இந்த வீடியோ பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.
மாணவி கல்வி கற்கும் பாடசாலைச் சமூகத்துக்கு இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களால் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஊடாக பொலிஸ் நிலையத்துக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து வீடியோ பதிவு செய்த இளைஞரும் அதனைப் பயன்படுத்தி மாணவியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புஸ்ஸலாவை இந்து தேசியக் கல்லூரியின் நவராத்திரி கலைவி
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக
வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா
நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தாம் செலுத்த வ
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்
மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மக
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணை யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவன மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் ப யாழ்ப்பாணம் பொது நூலக சிற்றுண்டி சாலை, யாழ்.நீதிமன்ற உ முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழு
