தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தள்ளிப்போகாதே படத்தில் அதர்வாவுடன் நடித்து இருந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். அனுபமா பரமேஸ்வரனை தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டையில் ஒரு கடையை திறந்து வைக்க அழைத்து இருந்தனர்.
அங்கு அவரை காண நிறைய ரசிகர்கள் திரண்டு நின்றார்கள். காரில் வந்து இறங்கிய அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்று கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சி முடிந்து காருக்கு அவர் திரும்பியபோது ரசிகர்கள் சூழ்ந்தனர். ரசிகர்கள் கூட்டத்தில் அனுபமா பரமேஸ்வரன் சிக்கினார். அனுபமாவுடன் ரசிகர்கள் முண்டியடித்து சிலர் கைகுலுக்கி செல்பி எடுத்தனர்.
அவரை காரில் ஏற விடாமல் தடுத்து ரகளை செய்தனர். செல்பி எடுக்க முடியாத சிலர் கோபத்தில் அனுபமா காரின் டயரில் காற்றை பிடுங்கி விட்டனர். ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய அனுபமா தவித்தார். உடனே கடை ஊழியர்களும், போலீசாரும் ரசிகர்களை விரட்டி அனுபமாவை மீட்டு வேறு ஒரு காரில் ஏற்றி ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ப
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று
தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமா
நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வ
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
சன் தொலைக்காட்சியில் 2020ம் ஆண்டு அண்ணன்-தங்கை பாசத்தை உ
300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தவர் ராம்கி என
ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேய
‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்த
கமலின் விக்ரம் படம் ரிலீசாகும் அதே நாளில் தான் விஜய் ச
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட
தமிழ் சினிமாவில் 90களில் சீரியல்களில் நடித்த பிரபலங்க
திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60க்கும் மேற
