சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகை பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். K.M. பாஸ்கரன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இந்தப் படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. இன்று நடந்த இந்நிகழ்வின் போது நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின், லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி திரு.G.K.M.தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் திரு.கலையரசு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி ராஜா.C ஆகியோர் இருந்தனர்.
தற்போது வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களை எல்லாம் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


சன் டிவியில் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையு
தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ம
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா கொண்டாடும் மிக முக்கியம
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்ச
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னிந்தியாவின் பி
பிக்பொஸ் போலவே மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ பார்வையாள
விக்ரம் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் கமல்ஹ
